பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எய்துதலாவது, புறத்தே செல்லாது மடங்கி ஒருநிலைப்பட்டு அடங்கித்தாரணைக்கண் நிற்றல். மெய்யுணர்வு - மெய்ப் பொருளாகிய இறைவனையுணரும் உணர்வு செம்பொரு ளாகிய இறைவனைச் சிந்தித்துப் போற்றாதார்க்கு மனம் ஐம்புலன் வழிச் செல்லாது அடங்கி நின்றாலும் அதனாற் சிறிதும் பயனில்லையெனவே தெளிந்த மெய்ப்பொருட் சிந்தனையுடையார்க்கே வீடுபேறாகிய பேரின்பநிலை எய்தும் என்பது பெறப்படும். உலகத்து யாதொரு பொருள் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும் தோன்றிய அவ்வெளித் தோற்றத்தைக் கண்ட அளவில் அமைந்துவிடாது அப் பொருளின் உள்நின்று இயக்கும் மெய்ப்பொருளைக் (இறைவனைக் கண்டுனர்வதே உண்மையான அறிவாகும் என்பர் சான்றோர். இந்நுட்பம்,

“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" (திருக். 355)

என வரும் திருக்குறளில் வலியுறுத்தப்பெற்றுள்ளமை காணலாம். இதன்கண் எப்பொருள் என்றது புறத்தே காணப்படும் மாறுந்தன்மையதாய உலகப்பொருள்களை. அப்பொருள் மெய்ப்பொருள் என்றது, அவ்வுலகப் பொருள்களின் உள்நின்றியக்கும் மாறாவியல்பினதாகிய செம்பொருளை.

"யாதொரு பொருள் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும் அத்தோன்றியவற்றைக் கண்டொழியாது அப்பொருள்களினின்று மெய்யாய பொருளைக் காண்பதே மெய்யுணர்வாவது” எனப் பொருள் வரைந்து இதனை மெய்யுணர்வது இலக்கணங் கூறியதாகக் கூறினார் பரிமேலழகர். பொருள்தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து நின்ற வுண்மையைக் காண்பதே மெய்யுணர்வு என்றவாறு, "அஃதாவது சோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்றவழி அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதோர் குடியும் வேழநோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேஎய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ் சேரலிரும்பொறை என்பதோர் சிறப்புப்பெயரும்