பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


விரண்டினையும் இரண்டதிகாரங்களில் திருவள்ளுவர் விரித்துரைத்தலால் சிற்றறிவுடைமை உயிர்களது இயல்பு என்பதனைத் திருவள்ளுவர் அறிவுறுத்தினாராவர்.

“அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யான் என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்குஇதுவேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆசையும் அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும் எனவடநூலார்க் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலான் மூன்று என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தி முன்னர்ப் பஞ்சுத் துய்ப்போலு மாகலின் அம்மிகுதி தோன்ற இவை மூன்றன் நாமம் கெட என்றார் . . காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இல்லை என்பது இதனாற்கூறப்பட்டது. முன்கிடந்த துன்பங்களும் மேல் வரக்கடவதுன்பங்களும் இல்லாதல் மெய்யுணர்வின் பயனாகலின் இவையிரண்டு பாட்டும் இவ்வதிகாரத்தவாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்தவுடம்பும் அது கொண்ட வினைப்பயன்களுமேயென்பது பெற்றாம்” என இக்குறளுக்கு விளக்கங்கூறுவர் பரிமேலழகர். மெய்யுணர்ந்தாராகிய சிவஞானிகளுக்கு ஒதுகன்மும் இல்லை என்பது,

“என்ற வினையுடலோ டேகும் இடையேறும் வினை

தோன்றில் அருளே சுடும்” (திருவருட்பயன் 98)

எனவரும் சித்தாந்த நூலால் நன்கு தெளியப்படும்.

உயிர்களால் முன்னர் ஈட்டப்பட்டு நுகர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாது சேர்ந்துள்ள பழவினையைச் சஞ்சிதம் எனவும், அவற்றுள் இப்பிறப்பில் நுகர்தற்கென உடம்பினால் முகந்து கொள்ளப்பட்ட நுகர்வினையைப் பிராரர்த்தம் எனவும், பிராரர்த்தம் நுகரும் பொழுதே அந் நுகர்ச்சியினுடன் தோன்றும் விருப்பு வெறுப்புக் காரணமாகப் புதியனவாய் வந்து ஏறும் வினையினை