பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

471


ஆகாமியம் எனவும் வழங்குதல் சைவசித்தாந்த மரபு. சஞ்சிதவினை ஆசிரியன் செய்யும் தீக்கையினாற் கெட்டொழியும், ஆகாமியம் சிவஞானத்தினால் வெந்தொழியும் என்பர். இப்பிறவியில் எடுத்தவுடம்பில் நுகர்தற்குரிய பிராரர்த்தமும் அது காரணமாக வந்தேறும் ஆகாமியமும் அற்றொழியப் பிறவாநிலை வந்தெய்தும். எனவே இனிவரும் பிறவிக்குரியனவாகிய சஞ்சிதம் கெட்டொழியும் என்பது கூறாமலேயே விளங்கும். இம்மூவகை வினைக்கும் சார்புணர்ந்து சார்புகெட வொழுகும் மெய்ஞ்ஞானிகளைச் சாராமாட்டா என்பார் ‘சார்தரும் நோய் சார்தரா எனவும் 'நாமங்கெடக்கெடும் நோய் எனவும் கூறினார் திருவள்ளுவர்.

யோகஞானங்களையுடையராய் முன்னும் பின்னு முள்ள வினைத்தொடர்பு அறுத்தார்க்கு அவர்தம் உடம்பும் அதுமுகந்து கொண்ட வினைப்பயன்களும் எஞ்சி நின்றமையின் வாதனை பற்றி ஒரோவழி முன்னர்த் துறக்கப்பட்ட புலன்கள் மேற்பழைய பயிற்சி வயத்தால் நினைவு செல்லுதல் உண்டு. அந்நினைவும் மருள் (அவிச்சை) எனப்படும் மாணா பிறப்பிற்கு வித்தாகும். அம்மயக்கத்தினை இடைவிடாத மெய்ப்பொருளுணர்வினால் அறுத்தல் வேண்டும் என அறிவுறுத்துவது அவாவறுத்தல் என்னும் அதிகாரமாகும். எல்லாவுயிர்க்கும் பிறப்பிற்குக் காரணம் அவாவே என்பதனையும், அத்தகைய அவா அறவே பிறவாமைதானே வரும் என்பதனையும் விளங்க அறிவுறுத்துவது,

"அவாவென்ட எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா,அப்பிறப்பினும் வித்து" (திருக். 361)

எனவரும் திருக்குறளாகும்.

உடம்பு நீங்கிப் போங்காலத்து அடுத்தவினையும் அது காட்டுங்கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்து உதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவா அக்கதிக்கண் கொண்டு செல்லும் ஆகலான் பிறப்பினும் அவா என்றார். தேவகதி,