பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

487


அந்நிலையடைதற்கு அவா வறுத்தலே சாதனமாதலும் குறிக்கப்பெற்றுள்மை காணலாம். பேதைமை காரணமாக நிலையுதலிலாவாகிய பொருள்களில் வைத்த பற்றுக்களே பிறப்பிற்குக் காரணமாம் என்பது,

հ - - * - -

பொருளல்லவற்றைப்பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப்பிறப்பு (திருக். 351) 'பொருளானாம் எல்லாமென்றிய திவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு' (திருக். 1002)

என்பவற்றாற் புலப்படுத்தப்பட்டது.

மெய்யுணர்வினால் உளதாம் அவாவறுதியே வீடு பேற்றுக்குக் காரணமாம் என்பதும் அத்தகைய அவாவை அறுத்தற்குரிய துறவுநிலையாகிய உறுதிப்பாடு தூயதாகிய

முழுமுதற் பொருளை இடைவிடாது சிந்தித்தலினாலே உளதாகும். என்பதும்

'தூஉய்மை என்பதவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்’ (திருக். 364)

‘பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (திருக். 350)

என்பவற்றால் விரித்துரைக்கப்பெற்றன.

உயிர்கள் எண்ணிறந்தன என்பதும், உலகமக்கள் தாம்தேடியவுணவைத் தாமே தனித்துண்ணாது இல்லாதார் பலர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்டுவாழ்தலே முன்னைச் சான்றோர் வகுத்த உலகியல் அறம் (திருக். 322) என்பதும், கொல்லாமையொன்றே சிறப்புடைய அறம் (திருக். 321, 323) எனவும், கொல்லா அறத்தினை மேற்கொண்டோரே இருவகைப் பற்றினையும் நீத்தாருள் தலையாயவர் (திருக். 325) என்பதும், கொல்லா அறத்தினை மேற்கொண்டோர்பால் உயிருண்ணுங்கூற்று செல்லாது (திருக். 326) எனவும், தனது உயிர் உடம்பினின்று நீங்கும் நிலையேற்பட்டாலும் பிறிதொன்றன் உயிரை நீக்குத்ல் கூடாது (திருக். 327) எனவும், தேவர்பொருட்டு வேள்விக்கண் பிறவுயிரைக் கொன்றால்