பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

501


மக்கள் வடிவில் வருதலியலாது எனக் கருதும் அறியாமை உடையோர் இச்சிறுகுடியோர் ஆதலின், நீ இங்ங்ணம். வருங்கால் உனக்கு ஆறுமுகங்கள் இல்லை என்றும், அழகிய மயிலாகிய ஊர்தி இல்லையென்றும், பக்கத்தில் குறமகளாகிய வள்ளிநாச்சியார் இல்லையென்றும், பன்னிரண்டு தோள்கள் இல்லையென்றும் கூறி, இவ்வூரார் வழிபாட்டினை ஏற்றுக்கொள்ள வந்த முருகனாக நின்னை உடன்பட மாட்டார்கள்” எனத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்து முகத்தால் இக்களவொழுக்கத்தினை விட்டுத் தலைவியை மனந்து கொள்ளத் துண்டினாள் என்பது மேலெடுத்துக் காட்டிய அடிகளின் பொருளாகும். இவ்வாறு தலைமகன் முருகனுக்கு உரிய கடப்ப மலர்மாலையை அணிந்து கையில் வேற்படையினையேந்தி வருதற்குக் காரணம் தன்னைக் கண்டார் மனங்கமழ் தெய்வத்து இளையோனாகிய முருகன் என்றெண்ணி, விலக்காதிருப்பர் என்பது கருதியே என்பதனை, "தலைமகள் கடம்பு சூடி உடம்பிடி யேந்தித் தன்னைக் குமரெ.ான்று பிறர் கருத வந்த காரணம் பண்டைத் தன் ம:ைங்கமழ் தெய்வத்திள நலங்காட்டி யென்றா ராதலால்” என்ற உரைக்குறிப்பால் அரும்பதவுரையாசிரியர் இனிது விளக்கியுள்ளார். அன்றியும் அறுமுகமுடைய வடிவமொன்றே அக்காலத்து முருகனுக்கு உரிய வடிவமாயிருந்திருப்பின், அவ்வடிவமில்லாமை கருதித் தலைவனை முருகனென உடன்படாத சிறுகுடியோரை மடவர் மன்ற இச்சிறு குடியோரே எனத்தோழி இகழ்ந் துரைத்ததாக இளங்கோவடிகள் கூறியதற்கு ஒரு சிறிதும் இயைபில்லாமையறிக. ஒரு முகமும் இருகையும் உடைய முருகன் திருவுருவமே சங்க காலத்திற்கு முன்னுள்ள பழைய வடிவம் என்றும், இளங்கோவடிகள் காலத்து அப்பழைய வடிவம் மக்களால் மறக்கப்படும்படி பிற்றை நாளில் புராணங்களில் சொல்லப்ப்ெற்ற ஆறுமுகத் திருமேனியே பொது மக்கள் வழிபாட்டில் இடம்பெறத் தொடங்கிய தென்றும் மேற்காட்டிய சிலப்பதிகாரத் தொடராலும் அதற்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய உரைக்குறிப்பாலும் இனிது புலப்படுத்தியுள்ளமை காண்க.

பத்தினிக்கோட்டம் அமைத்து வழிபட்ட