பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


செங்குட்டுவனுக்குக் கண்ணகியார் தமது கடவுள் தோற்றத்தைப் புலப்படுத்தியருளி,

‘தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன்கோயில்

நல்விருந்தாயினான் நானவன்றன்மகள் வேன்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்'

எனக் கூறியருளுதலால் குறிஞ்சி நிலத்திற்கு உரிமையுடைய தெய்வம் முருகனே என்னும் தொன்மை நன்கு வலியுறுத்தப் பெறுதல் காணலாம்.

கருங்கடலின் நடுவே சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தையறிந்து அவனைக் கொன்ற முருகன் அக்கடல் நடுவே திரையாகிய அரங்கத்தில் துடிகொட்டி ஆடிய கூத்து துடியென்னும் ஆடலாகும். அவுனர்கள் தாம் பொருதற் கெடுத்த படைகளைக் கீழே எறிந்துவிட்டு வருந்திய நிலையிலே முருகன் தன்முன் குடையைச் சாய்த்து அக்குடை யினை மறைப்புத் திரையாகக் கொண்டு நின்றாடிய கூத்து குடைக் கூத்தாகும். இவ்விரு கூத்தினையும் முறையே,

'நீர்த்திரையரங்கத்து நிகர்த்துமுன் னின்ற குர்த்திறங் கடந்தோன் ஆடியதுடியும்'

எனவும் இளங்கோவடிகள் விளக்கினமை காண்க.

திருமால் வழிபாடு

திருமால் கோயில் கொண்டுள்ள இடங்களாகத் திருவரங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, மதுரை, காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி நகரத்தே ஆடக மாடம் என ஆறு திருப்பதிகள் சிலப்பதிகாரத்திற் கூறப்பெற்றுள்ளன.

கோவலனும் கண்ணகியும் ஊழ்வினை செலுத்த வைகறைப் பொழுதிலே காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டுத் தோரன வாயிலைக் கடந்து, அரவணையின் மீது அறிதுயில் கொள்ளும் மணிவண்ணன் என்னும் திருநாமத்தை உடைய திருமால் கோயிலை வலஞ்செய்து