பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் . . .

509


அஞ்சன வண்ணனாகிய கண்னன் தன் மாமனாகிய கம்சனது வஞ்சனையால் வந்த யானையின் கொம்பை ஒடித்து நின்றாடிய கூத்தினை அல்லித் தொகுதியென்றும், காமன் மகன் அதிருத்தனைத் தன் மகள் உழை காரணமாக வானாசூரன் சிறைப்படுத்திய பொழுது அவனுடைய சோநகர வீதியிலே திருமால் குடங்கொண்டு ஆடிய கூத்தினைக் குடக்கூத்து என்றும், திருமால் வானனை வெல்லுதற்கு மல்லனாய் நின்று பொருது கொன்றாடிய கூத்து மல்லாடல் என்றும், அந்நாளில் காமன் ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பேடிக் கோலத்தோடு ஆடிய கூத்தினைப் பேடு என்றும், அவுனர்கள் போர் செய்யலாற்றாது மயங்கி வீழும்படி திருமகள் ஆடிய ஆடலைப் பாவைக் கூத்தென்றும், சோநகரத்து வடக்கு வாயிலிலே இந்திராணி வயலிடத்தே நின்றாடிய கூத்தினைக் கடையமென்றும் அடிகள் குறிப்பிடுகின்றார்.

இந்திரன் வழிபாடு

மருதநிலத் தெய்வமாகிய இந்திரனைத் தேவர் கோமான், விண்ணவர் முதல்வன், விண்ணவர் தலைவன், ஆயிரங்கண்ணோன், மலைச்சிறகரிந்த வச்சிர வேந்தன், இடிப்படை வானவன், விறல்வேல் வானவன் என அடிகள் புகழ்கின்றார். இந்திரனை வழிபடுங் கருத்துடன் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரவிழாக் கொண்டாடப்பெற்றது. இந்த விழாவின் நிகழ்ச்சியை இந்திரவிழவூ ரெடுத்த காதையில் இளங்கோவடிகள் விரித்துரைத்துள்ளார்.

சித்திரை மாதத்துச் சித்திரை விண்மீன் கூடிய பூரனை நாளிலே மருவூர்ப் பாக்கத்திற்கும், பட்டினப் பாக்கத்திற்கும் நடுவேயமைந்த பொது நிலமாகிய நளங்காடியிலே, வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்தனுக்கு வந்த இடையூற்றை ஒழித்தற் பொருட்டு இந்திரனால் அனுப்பப்பட்டுத் தேவருலகிலிருந்தும் போந்து பலிகொள்ளும் பூதத்தின் பீடிகையிலே, புழுக்கல் முதலிய பலிகளைச் சொரிந்து மறக்குடிப் பெண்டிரும் வீரர்களும் பலியிட்டு வழிபடுகின்றனர். அதன்பின் ஐவகை