பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மன்றங்களிலும் பலியிட்டு இந்திரனது வச்சிராயுதம் நிற்கும் கோயிலாகிய வச்சிரக்கோட்டத்திலிருக்கும் முரசையானை மீது ஏற்றி, அவனது ஐராவதம் நிற்கும் கோயிலிலே சென்று விழாவின் தொடக்கத்தையும் முடிவையும் அறைந்து சாற்றி, கற்பகதரு நின்ற கோயிலிலே ஐராவதமெழுதிய கொடியை யேற்றி ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அரச குமாரரும் பரதகுமாரரும் கூடி ஆயிரத்தெட்டு அரச தலையிற் க்மப்பித்துக் கொண்ட காவிரியின் நன்னீரைப் பொற் குடத்தேந்தி விண்ணவர் தலைவனாகிய இந்திரனை நீராட்டி வழிபடுகின்றனர். இவ்விழா இருபத்தெட்டு நாள் நடந்து, விழா முடிவில் கடலாட்டு நிகழுமென்றும், இப்பெரிய விழாதுைக் காணுதற் பொருட்டு வடநாட்டவரும் இங்கு வருவரென்றும் அடிகள் விளக்கியுள்ளார்.

வருணன்

நெய்தல் நிலத் தெய்வம் வருணனாவான். கரிய மலர் நெடுங்கண் காரிகையாகிய தலைவியின் முன்னர்க் கடற்றெய்வங் காட்டிக்காட்டி நின்னைப் பிரியேன் என்று தலைவன் தலைவிக்குச் சபதஞ் செய்கின்றான்.அச்சபதத்தை அவன் மறந்து விடுகிறான். அந்நிலையில் தலைவர் அறனில்லாதவர் என்பது எமக்கு முன்னமே எப்படித் தெரியும் என்று தோழி தலைவன் முன்னின்று முன்னிலைப் படர்க்கையாகப் பேசுகின்றாள். இப்பேச்சில் தலைவன் கடற்றெய்வத்தின் முன் நின்னைப்பிரியேன் எனத் தலைவிக்குச் சபதஞ் செய்து கொடுத்தமை குறிக்கப்பட்ட து. மாலைப்பொழுது கண்டு வருந்திய தலைவி, தலைவன் நின்னைப் பிரியேன் என்று தனக்குச் சொன்ன சபதத்தினைப் பொய்த்தமை கருதி, அவனைக் கடற்றெய்வம் சினந்து வருத்தாதபடி அத்தெய்வத்தைப் பணிந்து வேண்டுகின்றாள்.

‘பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடற் றெய்வம்நின் மலரடி வணங்குதும்’

என்பது தலைவியின் வேண்டுகோள்.

இதனால் கடற்றெய்வமாகிய வருணன் வழிபாடு