பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உலகியல், தத்துவம், முத்தி நிலை என்னும் இத்திறங்களைத் தங்கள் தங்கள் இயல்பினால் எடுத்துக்காட்டி மக்களை நன்னெறிப் படுத்தவல்ல சமயக்கணக்கராகிய சான்றோர்கள் காவிரிப்பூம்பட்டினம் முதலிய தமிழகத் தலைநகர்ங்களில் நிகழும் இந்திரவிழா முதலிய திருவிழா நிகழ்ச்சிகளிற் கலந்து கொண்டு அறிஞர் பலரும் குழுமிய பட்டி மண்டபத்தில் அமர்ந்து தத்தம் சமயவுண்மைகளைப் பலரும் தெளிவாக உணர்ந்து கொள்ளும்படி விளங்க விரித்துரைத்தனர். இச்செய்தி,

"மெய்த்திறம், வழக்கு நன்பொருள், வீடுஎனும்

இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கரும்”

(மணிமேகலை, விழாவறைகாதை, 11-13)

எனவும்,

"ஒட்டிய சமயத்துற பொருள் வாதிகள்

பட்டிமண்டபத்துப்பாங்கறிந்தேறுமின்” (மேலது. 60-61)

எனவும் வரும் மணிமேகலைத் தொடர்களால் இனிது புலனாம்.

தமிழகத்திற் சிவவழிபாட்டின் முதன்மை

சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவிய தெய்வ வழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் தலைமையும் சிறப்பும் வாய்ந்தது சிவவழிபாடு ஒன்றுமே என்பது முன்னர் விளக்கப் பெற்றது. சிலப்பதிகாரம் மணிமேகலை தோன்றிய காப்பிய காலத்தும் இந்நிலை தொடர்ந்து வந்துளது. இந்திர விழாவினைப் புகார் நகரமக்களுக்கு முரசறைந்து அறிவிக்கும் முரசறைவோன் கூறுவதாக அமைந்தது,

śÉ

நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக வேறுவேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை ஆறறிமரபின் அறிந்தோர் செய்யுமின்”

(மணிமேகலை 1, 54-57)