பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

545


வேதநெறியாளர் போற்றும் நாமகளாகிய சரசுவதியே இங்குச் சிந்தாதேவி என்ற பெயராற் போற்றப்பெறுகின்றாள் எனக் கருத வேண்டியுள்ளது.

மணிமேகலை கேட்டறிந்த சமயக் கொள்கைகள்

வேற்றுருக் கொண்டு வஞ்சி நகரத்தையடைந்த மணிமேகலை அந்நகரத்தில் வாழும் சமய வாதிகள் பலருடைய தத்துவக் கொள்கைகளையும் தெரிந்துகொள்ள விரும்பி அவர்களுள்ளே வைதிக்நெறியைச் சார்ந்த அளவை வாதியைக் கண்டு நினது கொள்கை யாது? சொல்லுக’ என வினவுகின்றாள். அவன் தனது கோட்பாட்டைக் கூறக் கேட்ட பின் முறையே சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி ஆகியவர்களையடைந்து அன்னோர் தம் சமயக் கொள்கைகளை முறையே கூறக்கேட்டு மெய்த்திறம், வழக்கு என்னும் எத்திறத்திலும் இவர்களது உரை பொருந்தாது என்று எண்ணி அவர்களை விட்டு நீங்கிப்பின்பு ஆசிவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி என்போரை யணுகி வினவி ஐவகைச் சமயங்களையும் அறிந்து கொண்டனள் எனச் சாத்தனார் கூறுகின்றார். எனவே வைதிகநெறியினையும் கடவுட் கொள்கையையும் ஏற்கும் விருப்பின்றி வேதநெறியொடு மாறுபட்டனவும் கடவு, கொள்கையில்லாதனவும் புத்த சமயத்தோடு உடன் எண்ணப்படுவனவுமாகிய புறச்சமயங்களைப் பற்றிய விளக்கமே சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் விரிவாக இடம் பெற்றுள்ளன என்பதும் தெய்வங்கொள்கை யினையுடைய சைவம் வைணவம் முதலிய அகச் சமயம் பற்றிய தத்துவ விளக்கங்கள் இக்காதையில் ஒரளவே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன என்பதும் இங்கு மனங் கொள்ளத்தக்கனவாகும்.

மணிமேகலையிற் காணப்படும் சைவவாதியின் கூற்று

மணிமேகலை இறைவன் ஈசன்’ எனக்கூறிய சைவ வாதியை நேர்பட்டு, நின்னால் வழிபடப்பெறும் தெய்வம் எத்தன்மையது என வினவிய பொழுது, அதனைக் கேட்ட

கை. இ. சா. வ. 35