பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் . . .

547


கூறியுள்ளார். இறைவன் - உலகு உயிர்கள் ஆகிய எல்லாப் பொருள்களிலும் நீக்கமின்றி நிலைத்துள்ளவன், ஈசன் - உலகப் பொருள் எல்லாவற்றையும் தனது உடைமையாகக் கொண்ட தலைவன். ஈசன் என்னும் பெயர் ஈண்டுச் சிவபெருமான் என்னுஞ் சிறப்புப்பொருளில் ஆளப் பெற்றுள்ளது. சங்கரன் ஈசன் சயம்பு’ என வரும் சிலப்பதிகாரத் தொடரில் சிவபெருமானுக்குரிய சங்கரன் ஈசன் சயம்பு எனவரும் சிறப்புப் பெயர்கள் இறைவன் என்னும் பொதுப்பொருளில் வழங்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களின் ஆட்சியைக் கூர்ந்து நோக்குங்கால், சிவவழிபாடு தமிழ் நாட்டில் மக்கள் எல்லோரும் மதித்துப் போற்றும் சிறப்பு வழிபாடாகவும் பொது வழிபாடாகவும் யாண்டும் பரவியிருந்தமை இனிது புலனாகும்.

இனி, மணிமேகலையில் இடம்பெற்றுள்ள சைவவாதி கூற்றிலமைந்த கடவுளிலக் கனத்தினை ஒரு சிறிது நோக்குவோம். ஞாயிறு திங்கள் ஆன்மா ஐம்பெரும்பூதம் என்னும் எண்பேருருவினனாக (அட்ட மூர்த்தியாக) இறைவன் விளங்குந்திறத்தினை,

“இருசுடரோடு இயமானன் ஐம்பூதம் என்று

எட்டுவகையும் உயிரும் யாக்கையுமாய்க்

கட்டிநிற்போன்”

என்ற தொடர் விரித்துரைப்பதாகும். இருசுடர் என்பது ஞாயிறும் திங்களுமாகிய ஒளிப்பொருள்கள். இயமானன். வேள்வித்தலைவன், என்றது ஆன்மாவை. ஐம்பூதமாவன நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்பன. மேற்குறித்த எண்வகைப் பொருள்களையும் இறைவன் தனக்குரிய திருமேனிகளாகக் கொண்டு அவற்றுடன் பிரிவின்றி ஒன்றுபட்டு விளங்கும் திறத்தை,

“இருநிலனாய்த் தீயாகிநீருமாகி

இயமானனாய் எறியுங்காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி

ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி (6.91.1)

எனவரும் நின்ற திருத்தாண்டகத்தில் திருநாவுக்கரசர்