பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இடர் விளைவிக்குமியல்பினதாய் மாறிய செய்தியைத் திருமந்திரம் குறிப்பிடுதலாலும் திருமூலர் அருளிய திருமந்திர மாலை மூவாயிரம் பாடல்களால் முழுமை பெற்ற காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கொள்ளுதல் பொருந்தும். திருமூலர் திருஆவடுதுறையிற் சிவபோதியின் கீழ்ச் சிவயோகத்து அமர்ந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூறாண்டுகள் முற்பட்டிருத்தல் வேண்டும். எனவே எண்ணிலிகாலம் சிவயோகத்தமர்ந்த திருமூலர் கடைச் சங்கம் நிலவிய காலத்திலும் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் கூடும் என எண்ணுதற்கு இடமுண்டு. தொல்காப்பியம் புறத்தினையியல் 20-ஆம் சூத்திரவுரையில்,

“யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேயத்து அனநிலை வகையோராவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத்தராவர்” என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியாராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர்களையும் குறித்ததெனக் கருதவேண்டியுள்ளது.

திருமூலர், வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் தெளிந்துணர்ந்த சிவஞானச் செல்வராய்த் தாம் சிவனருளாற் சிந்தித்துணர்ந்த சிவாகம உண்மைகளை இமய முதற் குமரி வரையுள்ள பாரத நாட்டவர் பலரும் ஒதியுணர்ந்து உய்தி பெறுதல் வேண்டும் என்னும் அருளுள்ளத்தால் இத்திருமந்திரமாலையை அருளிச் செய்துள்ளார். எனவே அவர் அருளிய திருமந்திரப் பாடல்களில் சைவ சித்தாந்தக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம், ஆணவம், கன்மம், மாயை, சித்து, அசித்து, சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்து, அசத்து, சதசத்து, வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம், நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம், சத்தாதி, வாக்குமனாதிகள், சாக்கிராத்தம், சுத்தம், துரியம், விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர், சகலத்தின் அஞ்ஞானர், இயமம், நிமயம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி,