பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

573


இனிது விளங்கும். ஒன்றவன்றான்' எனவரும் இத்திருப் பாடலுக்கு முன்னேயுள்ள ஐந்து கரத்தனை என்னும் விநாயகர் வணக்கத் திருப்பாடல் இந் நூற்குக் காப்புச் செய்யுளாகப் பின்வந்த சான்றோரொருவராற் பாடிச் சேர்க்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பர் அறிஞர்.

இனி, திருமந்திரம் பாயிரப்பகுதியிலுள்ள 112 பாடல் களில் 67 பாடல்களே திருமூலர் வாக்கென்றும் ஏனைய 45 பாடல்களும் இடைச்செருகல் என்றும் கருதுவாரும் உளர். திருமந்திர நூலின் தொடக்கத்திலமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களும், திருமூலர் தமது குருமரபின் வழிமுறை கூறும் குரு பாரம்பரியமும் ஆசிரியர் தாம் இந்நூலை இயற்றுதற் குரிய சூழ்நிலையும் நோக்கமும் ஆகிய இயைபினைப் புலப்படுத்தும் முறையில் தமது வரலாற்றினைத் தாமே கூறுவதாக அமைந்த திருமூலர் வரலாறும், ஆசிரியர் கூறும் அவையடக்கமும் ஆகிய பகுதிகள் இந்நூலின் தொடக்கத்தே விரித்துக் கூறுதற்குரிய பாயிரப் பொருள்களாதலின், இவை திருமூலர் வாக்காகவே கொள்ளத்தக்கன.

“சிந்தை செய்தாக மஞ்செப்பலுற்றேனே" (திருமந்:73)

“ஒப்பில் எழுகோடியுகமிருந்தேனே' (திருமந்: 74)

“சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடுதண்டுறை” (திருமந்:79)

“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி’ (திருமந், 80) “தன்னை நன்றாகத்தமிழ் செய்யுமாறே (திருமந் 81) "நானுமிருந்தேன்தற்போதியின் .ே திருமந்ை

எனத் திருமூலர் தன்மையொருமையில் வைத்துத் தம்மைப் பற்றிக் கூறிய இவ்வகச் சான்றுகளைப் பின்வந்தோர் கூற்றாக ஒதுக்கி விடுதல் ஒரு சிறிதும் பொருந்தாது. இத்திருப்பாடல் களையே ஆதாரமாகக் கொண்டு சேக்கிழார் திருமூலர் வரலாற்றை விரித்துக் கூறியுள்ளமையும் இங்குக் கருதத் தக்கது. இப்பாயிரத்திறுதியில் திருமந்திரப் பாடல் தொகை யினையும் பொருட் சிறப்பினையும் கூறும் 99, 100ஆம் பாடல்களும், குரு வரலாறு கூறும் 101, 102 ஆம் பாடல்