பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

613


காணப்பெற்றுப் பயன்கொண்டேன்” என்பது இதன் பொருள்.

அருள்நோக்கி என் சிரத்தில் திருவடி வைத்துப் பெருவடிவைத் தந்தபேர்நந்தி என இயையும். அருள்நோக்கி - அருட்கண்ணாற்பார்த்தருளி. ‘அத்தாவுன் அடியேனை அன்பால் ஆர்த்தாய், அருள்நோக்கால் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்” என்பது திருநாவுக்கரசர் வாய்மொழி.

'ஆகமங்கள் எங்கே அறுசமயம்தா னெங்கே

யோகங்கண் எங்கே யுனர்வெங்கே - பாகத்து அருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு”

எனவரும் திருக்களிற்றுப்படியாரும்,

“நானுமென் சிந்தையும் நாயகனுக்கெவ் விடத்தோம்

தானுந்தன்தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்’

(திருவாசகம். கோத்தும்பி)

எனவரும் திருவாசகமும் இங்கு நினைக்கத்தக்கன.

கருவழி மாற்றிடுதலாவது, கடலின் அலைபோல்

மேன்மேல் தொடர்ந்து வரும் பிறவி வழியை யடைத்துப் பிறவாநெறியினைத் தலைப்படுதல்.

"திருவார்பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்

கருவேரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை”

எனவும்,

“பிறவிவேரறுத் தென்குடிமுழுதாண்டபிஞ்ஞகா”

எனவும் வரும் திருவாசகத் தொடர்கள் இங்கு நோக்கத் தக்கன.

குருவின் அருளால் திருவடிஞானம் பெற்றமையால் உளதாம் பெரும்பயனைக் கூறுவது,

“கழலார் கமலத்திருவடியென்னும்

நிழல்சேரப் பெற்றேன் நெடுமாலறியா