பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பெருந்தெய்வமாகிய சிவமாந்தன்மைப் பெருவாழ்வு. இத்திருமந்திரப் பாடலை ஒத்து அமைந்தது.

“அருளே யுலகெலாம் ஆள்விப்பதீசன்

அருளே பிறப்பறுப்பதானால் - அருளாலே மெய்ப்பெருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவதெனக்கு’ (அற்புதத்திருவந்தாதி)

எனவரும் காரைக்காலம்மையார் அருளிச் செயலாகும்.

நற்பொருளைக் கேட்டற்குரிய பக்குவனாகிய நன்மாணாக்கனது இயல்பினைக் கூறுவது,

“சத்தும் அசத்தும் எவ்வறெனத் தானுன்னிச் சித்தையுருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந்தானந்தச் சத்தியில் இச்சைத் தருவோன் சற்சீடனே’ (1697)

என வரும் திருமந்திரமாகும். "என்றும் மாறாதுள்ள மெய்ப்பொருளும், ஒருநிலையில் நில்லாது மாற்றமடையும் பொய்ப்பொருளும் எத்தன்மையவெனத் தான் சிந்தித் துணர்ந்து, சித்தத்தை யுருகச் செய்து சிவபெருமானது திருவருள் உய்யும் நெறியிது வெனக் காட்டித் துணை செய்ய, அம்முதல்வன் கைம்மாறு கருதாது செய்துவரும் உபகாரத்தை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் பேரன்பினாலே அதன்பயனாகிய சிவஞானம் கைவரப் பெறுதல் வேண்டி இறைவனைப் பணிந்து பேரானந்தத்தை வழங்கும் அம்முதல்வனது திருவருளிற் படிதற்குப் பெரு விருப்புடையோன் பரிபாக முடைய நல்ல மாணாக்கனாவன்” என்பது இதன்பொருளாகும். சத்து என்றது, சுட்டறிவினால் அறியப்படாது சிவஞானம் ஒன்றினாலே அறிதற்குரியதாய் என்றும் மாற்ாவியல்பினையுடைய உள்பொருளாகிய சிவம். அசத்து என்றது, உயிரறிவினாற் சுட்டியறியப்படுவதாய் அழியுந்தன்மையதாகிய உலகத்தொகுதி. சித்து - சித்தம்; அம்முக்கெட்டுச்சித்து என உகரவீறாய் நின்றது. திருமூல நாயனார் கூறிய சத்து, அசத்து என்பவற்றின் இயல்பினை,

“உணருரு வசத்தெனின் உணர தின்மையின்