பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

619


எனவரும் திருமந்திரமாகும். காணாத கண், கேளாத கேள்வி என்றது, தத்தம் உணர்வு நிகழ்தற்குரிய வாயிலாகக் கண் முதலிய பொறிகள் இருந்தும், அப்பொறிகள் உலகப் பொருள்களைப் பற்றாது காணுங்கரணங்களெல்லாம் பேரின்ப மெனப் பேனும் நிலையில், உயிர் சிவானந்தத்தில் திளைக்கும்படி தத்தம் செயல் மடங்கிய திறத்தினை. 'விழித்தகண் குருடாய்த் திரிவீரரும் பலரால் என்பது பெரிய புராணம். கோணாதபோகம் என்றது, விருப்பு வெறுப்புக் களால் மனம் மாறுபடாது திருவருளில் ஒன்றி நுகரும் சிவாநுபவமாகிய நுகர்ச்சி. கோணுதல்-மாறுபடுதல். கூடாத கூட்டம் என்றது, பின்பிரிந்து கூடும்நிலையின்றி எக் காலத்தும் உடனாய் ஒன்றியிருத்தலாகிய அத்துவிதநிலை. நானாவது, செய்யத்தகாதனவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல். நானாத நானாவது, அவனருளாலல்லது ஒன்றையுஞ் செய்யாது தான் என்னும் உணர்வு ஒடுங்குதல்; தன்பணிநீத்து இறைபணி நிற்றல். நாதாந்தபோதம் என்றது, நாததத்துதவம் முடியவுள்ள முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்து அதன்மேலாக விளங்கும் சிவஞானத்தினை. காணாய் - கண்டறிய மாட்டாதாய், காண்பாயாக. காட்டினன் - உபதேசித்துப் பொருளின் இயல்பினை யான் காணும்படி உடனிருந்து காட்டியருளினான். நந்தி - சிவபெருமான்.

இறைவனது திருவருளாலேயே உயிர்கட்கு ஞானம் உண்டாகும் என்னும் உண்மையினை உணர்த்துவது, அருளுடைமையின் ஞானம் வருதல் என்னும் பகுதியாகும். இறைவன் திருவருள் கிடைத்தால் எல்லா நலங்களும் எளிதிற் கிடைக்கும் என அறிவுறுத்துவது,

“பிரானருளுண்டெனின் உண்டுநற் செல்வம் பிரானரு ளுண்டெனின் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந்தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமும் ஆமே” (1645)

எனவரும் திருமந்திரமாகும். நற்செல்வம் - கெடுதலும் ஆதலும் இல்லாத நல்லசெல்வம். நன்ஞானம் - குறையாத பேரறிவாகிய சிவஞானம். பெருந்தன்மை - பெருங்குனம்; என்றது இறைவனுக்குரிய எண்குணங்களை. பெருந்தெய்வம்