பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


படரினும் என்புழி உம்மை எதிர்மறை. ஆங்காரம் - யான் எனது என்னும் தன்முனைப்பு. அது என்றது ளுேயத்தை, அதன் நிலைநிற்றலாவது ஞேயமாகிய மெய்ப்பொரு ளுனர்வில் அடங்கிநிற்றல். நீங்காநிலை, அமுதநிலை எனத்தனித்தனி இயைத்துப்பொருள்கொள்க. நீங்காநிலை - தன்னைச் சார்ந்தாரைப் புறத்தே நீங்கவிடாது பிரிவறத் தன்னோடு உடனாக்கிக் கொள்ளும்நிலை. அமுதநிலை - பேராவியற்கையாகிய பேரின்பநிலை. இந் நிலையினை,

“பாசிபடுகுட்டத்திற் கல்லினைவிட்டெறியப்

படும்பொழுதுநீங்கி அதுவிடும் பொழுதிற் பரக்கும்

மாசுபடுமலமாயை யருங்கன்ம மனைத்தும்

அரனடியையுணரும்போதகலும், பின் அணுகும்

நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே துங்கும்

நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவேயாகி

ஆசையொடும்அங்குமிங்குமாகி யலமருவோர் அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி

யுரைப்பாம்.” (சித்தியார். 291)

என வரும் பாடலில் அருணந்தி சிவனார் தெளிவாக விளக்கியுள்ளவை அறியத்தகுவதாகும்.

மேற்காட்டிய திருமந்திரத்தில் பாசம் படரார்' எனப் பாச நீக்கமும், நீங்கா அமுதநிலைபெறலாம்’ எனச் சிவப்பேறும் ஆகிய இருவகைப் பயன்களும் தெரித் துணர்த்தப் பெற்றமை காண்க.

காண்பான் காட்சியுணர்வு காணத்தகுபொருள் என்னும் வேற்றுமையற்று மெய்ப்பொருளில் அழுந்தி நிற்றலின் இயல்பினையும் அதனைக் குரு தமக்கு உபதேசித் தருளிய திறத்தையும் விளக்குவது,

"காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்

கோணாத போகமுங் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமும் காணா யெனவந்து காட்டினன் நந்தியே’ (1610)