பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

621


இருதிறனல்லது சிவசத்தாம் என இரண்டு வகையின் இசைக்குமன்னுலகே (சிவ.கு. ம)

எனச் சிவஞான போத ஆறாஞ்சூத்திரத்தும், சதசத்தின் இயல்பினை,

“யாவையுஞ் சூனியம் சத்தெதிராகவிற்

சத்தேயறியாதசத்தில தறியா திருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா” (சிவ. சா. 7)

என ஏழாஞ்சூத்திரத்தும் ஆசிரியர் மெய்கண்டார் விளக்கியுள்ள திறத்தைக் கூர்ந்து நோக்குங்கால் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார் முதலாகவுள்ள சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல்நூலாகத் திகழ்வது திருமூலர் அருளிய திருமந்திரமாகிய திருமுறையே என்பது நன்கு புலனாகும்.

ஏழாந் தந்திரம்

இஃது ஆறாதாரம் முதல் இதோபதேசம் ஈறாக முப்பத்தெட்டு உட்பிரிவுகளையுடையது. இதனுட் கூறப்படும் பொருள்களுள், ஆறாதார நிலைகள், சிவலிங்க பேதங்கள், அருளொளி, குருலிங்க சங்கம வழிபாடு, ஆதித்தர் வகை. ஐம்பொறிகளை யடக்கும்முறை, சற்குரு, இதோப தேசம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை மேற்குறித்த தசகாரியங்களுள் சிவரூபம், சிவதரிசனம் என்னும் இரண்டையும் விளக்குவன. போசனவிதி, பிட்சாவிதி, பூரனக் குகைநெறிச் சமாதி, சமாதிக்கிரியை , விந்துச்சயம் என்பன, ஞானம் பெறுதற்குத் துணையாக வுள்ள நல்லொழுக்க நெறிகளை யறிவுறுத்துவனவாகும். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுள் வைத்து அண்ட லிங்கம் முதலிய அறுவல்க இலிங்கங்களையும் கண்டு வழிபடுதலும், அருளொளிக்குள் ஒடுங்கியிருந்து குருலிங்க சங்கமம் என்னும் மூன்றிடங்களிலும் சிவபெருமானை வெளிப்படக்கண்டு வழிபடுதலும் ஆகிய இவை, அகமும் புறமுமாகச் செய்தற்குரிய வழிபாடுகள் எனச் சைவநூல்கள் கூறும். ஐந்திந்திரியம் அடக்கும் முறை, கூடாவொழுக்கம் நீத்தல், கேடுகண்டிரங்கல் என்ற தலைப்புக்களிலுள்ள