பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தாகிய பரம்பொருளைப் போன்று வியாபக நிலையை யுடையதாகாமல், முளை, தவிடு, உமியினால் மறைக்கப்பட்ட அரிசியினைப் போன்று மும்மலங்களால் மறைக்கப்பட்டுக் கட்டுற்றுநிற்கும். ஆகவே ஆன்மாவாகிய நீ நின்னின் வேறாகிய இப்பாசங்களைப் பிரித்துணர்தற்பொருட்டுத் தானுவாகிய சிவபெருமான் திருவடியை விரும்பிப் போற்றுவாயாகஎன மாணாக்கற்கு அறிவுறுத்துவதாக அமைந்தது,

"ஆணவ மாயையுங் கன்மமுமாமலம்

தானு முளைக்குத் தவிடுமி, ஆன்மாவும்

தானுவை யொவ்வாமல் தண்டுல மாய்நிற்கும்

பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே” (2192)

எனவரும் திருமந்திரமாகும்.

“மும்மலம் நெல்லினுக்கு முளையொடு தவிடுமிபோல்

மம்மர்செய்தணுவினுண்மை வடிவினை மறைத்துநின்று”

(சித்தியார் சுபக். 172)

எனவரும் சிவஞானசித்தியாரும்,

"உயிருண்டாவே யுளதுமலம், மலமுளதாய் ஒழிந்தவெல்லாம்

நெல்லின் முளைதவிடுமிபோல் அநாதியாக நிகழ்த்திடுவர் இதுசைவம் நிகழ்த்துமாறே” (சிவப். 25)

எனவரும் சிவப்பிரகாசமும் இத்திருமந்திரத்தை அடியொற்றி யமைந்தன. நெல்லின் முளைதவிடுமிபோல்’ என்னும் இவ்வுவமையில் நெல்லினுள்ளேயுள்ள அரிசி ஆன்மாவிற்கு உவமை. அரிசியைப் பற்றியுள்ள தவிடு ஆணவமலத்திற்கு உவமை. உமி மாயைக்கு உவமை என விளக்கந்தருவர் மதுரைச் சிவப்பிரகாசர்.

"ஆணவம் பிண்டி, அருமாயை தான்உமி,

காமியம் மூக்கென்று கர்ண்”

என்பது வீட்டு நெறிப்பால், “நெல்லின் உமிபோனால் முளைசீவியாதாற்போலக் கன்மமும் மாயை ஆதாரமாக ஒடுங்கி மீளவும் மாயை ஆதாரமாகச் சீவிக்கும். கன்ம