பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

639


பஞ்சபேதம் என்பது முதல் சோதனை என்பது ஈறாக நாற்பத்துமூன்று உட்பிரிவுகளையுடையது. இவற்றுள் உடலிற் பஞ்சபேதம் சாக்கிரம் முதலிய அவத்தைபேதங்கள், கேவல சகலசுத்தம் என்னும் மூவகைநிலைகள் அறிவுதயம், ஆறந்தம், மகாவாக்கியம், வாய்மை, அவாவறுத்தல், பத்தியுடைமை, சோதனை முதலிய பொருள்கள் சிறப்பாகக் குறிக்கத்தக்கனவாகும். சிவதரிசனத்தின் பின் சிவனொடு கூடுதல் என்னும் சிவயோக நிலையினையுணர்த்துதல் எட்டாந் தந்திரத்தின் கருத்து என்பர் பெரியோர். இத் தந்திரத்திற் கூறப்படும் சிவயோக நிலைகள் பற்றிய அரும் பொருள்களும் மேற்கூறப்பட்ட அட்டாங்கயோகம் பற்றிய துண்பொருள்களும் அனுபவமுடைய ஆசிரியர்களை வழிபட்டு அவர்கள் அறிவுறுத்திய நெறியில் நின்று உணர்ந்து கொள்ளத்தக்கனவன்றி ஏனையோரால் உணர்ந்து கூறப்படும் எளிமையுடையன அல்ல. எனவே அப்பொருள்களைப் பற்றி இவ்வாய்வு நூலில் விளக்கம் தருதற்கு இயலவில்லை.

'அடித்தலை யறியுந்திறங்கூறல்” என்ற பகுதி, ஆன்மா இறைவன் திருவருளில் தலைப்பட்டுத் தாடலைப் போல் அடங்கி நிற்றலாகிய அத்துவிதநிலையினைப் புலப்படுத்துவ தாகும். மகாவாக்கியம் என்ற பகுதியில் 'தத்துவமசி எனவும் 'சிவாத்துவிள்ம்' எனவும் அருமறைகளிற் கூறப்படும் தத்துவ நுண்பொருள் விரித்துரைக்கப்பெற்றுள்ளது. வாய்மைவழி நின்று தன்னை யறிந்திடுந் தத்துவஞானிகள், உலகப் பொருள்களிலுள்ள அவாவையறுத்து, உயிர்க்குயிராகிய முதல்வன்பால் எல்லையற்ற பத்தியுடையராய்ச் சிவ யோகத்தின் முடிந்த நிலையில் நிற்குந்திறத்தினை விளக்குவன இத்தந்திரத்தினுள் வாய்மை, ஞானிசெயல், அவாவறுத்தல் பத்தியுடைமை, சோதனையென்ற தலைப்புக்களில் அமைந்த திருமந்திரப் பாடல்களாகும்.

ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களும் நெல்லில் (அரிசியைச் சூழ்ந்து) அமைந்துள்ள முளைதவிடு உமி என்பவற்றைப் போன்று ஆன்மாவை முறையே பிணித்துள்ளன. அவ்வாறு மலத்தினால் அநாதியே மறைக்கப்பட்டுள்ள ஆன்மாவும் என்றும் ஒருநிலையின