பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

645


கலை முதலியவற்றோடு செறிந்தும் இச்சையுற்றும் நால்வகை வாக்குக்களால் நிகழும் அறிவினையடைந்தும் தொழிலைப் பொருந்தியும் ஓசை முதலிய நுகர்பொருள்களில் விருப்பஞ் செய்தும் போகம் நுகர்ந்தும் இவ்வுலகிற் பிறப்பு இறப்புக்களிற் புக்கு உழன்றும் ஏகதேசியாய்ச் சகலாவத்தையிற் சீவித்து நிற்பவன் சீவன் என்னும் ஆன்மா” என்பது இதன்பொருள். போகம் நுகர்ச்சி போக்கியம் - நுகர்பொருள். நுகர்ச்சிக்குரிய கருவியாகிய கலை முதலியவற்றைப் போககாண்டம் என்றும், நுகர் பொருட்பகுதியாகிய புந்தி முதலியவற்றைப் போக்கிய காண்டம் என்றும் வழங்குதல் மரபு. -

ஆன்மா இறையருளாற் பாசப்பிணிப்பினின்றும் நீங்கித் துயதாகிய நிலை சுத்தாவத்தையெனப்படும். இதன் இயல்பினை விளக்குவது,

"இருவினையொத்திட இன்னருட்சத்தி

மருவிட ஞானத்தின் ஆதனமன்னி குருவினைக் கொண்டருட்சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப்பிறவாமை சுத்தமே.” (2262)

எனவரும் திருமந்திரமாகும். "இருவினையொப்பு நிகழ இனிய திருவருளாகிய சத்தி பதிய, ஞானயோகத்தில் ஒன்றி யிருத்தலா நிலைத்து உபதேச குரு வாய்க்கப்பெற்று அவரால் திருவருட் சத்தியாகிய சிவஞானம் கூடப்பெற்றுப் பெரிய குற்றமாகிய ஆணவ மலம் நீங்கிப் பிறவாநிலையை யடைதலே சுத்தாவத்தையாகும்” என்பது இதன்பொருள்.

ஓசை முதலிய நுகர்பொருள்களின் விருப்பங்கழிதற்கு ஏதுவாவது இருவினையொப்பு, போக போக்கியக் கருவிகளின் செறிவு நீங்குதற்கு ஏதுவாவது சத்திநிபாதம். உருவங்கழிதற்கு ஏது குருவருள். பிறந்து திரிதல் கழிதற்கு ஏது ஞான சாதனம். ஏகதேசத் தன்மை கழிதற்கு ஏது மும்மலநீக்கம். ஒசை முதலிய பொருள் நுகர்ச்சி கழிதற்கு ஏது வாதனை நீக்கம். பாச அறிவிச்சை செயல்கள் கழிதற்கு ஏது ஞானப்பெருக்கம்.

இருவினையொப்பு : ஒன்றில் விருப்பும் ஒன்றில்