பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

651


உருவம் அறிவு என்பதனையுணர்ந்து (இவ்வுண்மையை அறிவுறுத்திய) அம்முதல்வனது திருமேனி ஞானமே என்பதனையுணர்ந்து அறிவே வடிவாகிய அவனுடன் பிரியாது ஒன்றியிருக்கும் நிலையினைப் பெற்றேன்” என்பது இதன்பொருளாகும்.

உயிர்க்கு அறிவே வடிவென்று அறிவுறுத்திய இத்திருமந்திரப் பொருளையுளங்கொண்டு விளக்கும் முறையில் அமைந்தது,

“ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை

வேறொருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும் ஒன்றொன்றா நாடியுணர்ந் தேதியதில் உற்றறிவாய் நின்றபொருள் தானேகாண் நீ” (உண்மை 26)

எனவரும் உண்மை விளக்கச் செய்யுளாகும்.

“பாராதி பூதம் நீயல்லை - உன்னிப்

பாரிந்திரியங் கரண நீயல்லை ஆரா உணர்வு நீயென்றான் - ஐயன் அன்பாயுரைத்த சொல் ஆனந்தந்தோழி”

எனத் தாயுமானார் கூறும் குருமொழியும் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

திருமூலர் காலத்தில் வேதாந்தம் அதன் மேற்பட்ட சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்னும் அறுவகைச் சமயத் தத்துவ முடிபுகள் அச்சமயத்திற் குரியனவாக வழங்கின என்பது, ‘வேதத்தன் அந்தமும் மிக்க சித்தாந்தமும் (2370) என வரும் திருமந்திரத்தால் அறியப்படும். உடல் கருவிகளோடு கூடியும் அவற்றில் அழுந்தாமல் சீவன் முத்தராம் நிலை சித்தாந்தச் செந்நெறிக் குரியதென்பதும் சித்தாந்தமும் வேதாந்தமும் பொரு ளொற்றுமையுடையன என்பதும்,

“சித்தாந்தத்தே சீவன் முத்தி சித்தித்தலால் சித்தாந்தத்தே நிற்பர் முத்தி சித்தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொருளாதலால் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே’ (2394)