பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

665


எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் சூக்கும பஞ்சாக்கரத்தின் உருவினைப் புலப்படுத்தல் காண்க.

அதிசூக்கும பஞ்சாக்கரத்தின் அமைப்பும் அதனை விதிப்படி எண்ணுதலால் வரும் பயனும் உணர்த்துவது,

“சிவாயநமவெனச் சித்தம் ஒடுக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயங்கெட நிற்க ஆனந்த மாமே” (2718)

எனவரும் திருமந்திரமாகும். “சிவாயநம என்னுஞ் சூக்கும பஞ்சாக்கரத்தின் துணையால் சித்தத்தை ஒருவழிப்பட நிறுத்தித் தற்போதத்தால் உளதாம் அச்சம் அறவே நீங்க (திரோதத்தையும் மலத்தையும் உணர்த்தும் நம என்பதனை விலக்கி) ஆன்மாவை இறைவனுக்கு மீளாவடிமையாக்கிச் சிவாய சிவசிவ என்ற இவ்வாறு திருவைந்தெழுத்தைச் சிந்தையில் எண்ணித் தற்போதத்தால் உண்டாகும் அச்சம் அகன்றொழியச் சிவபரம்பொருளை ஒன்றி நின்று உணர்தலால் சிவானந்தமான பேரின்பம் விளையும் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும்.

ஆன்மா ஆணவமலமாகிய குற்றத்துடன் கூடிய நகாரத்திற்கும் அருளாகிய வகாரத்திற்கும் இடையே நிற்கும் நிலையினையுணர்த்தும் பருமைநிலையில் அமையாது, யகரமாகிய உயிர் வகரமாகிய அருளினாலே அவ்வகரத் திற்கும் சிவமாகிய சிகரத்திற்கும் இடையே நிற்கும் தூய நிலையினை யுணர்த்துவது, சிவாயசிவ என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரமாகும் என்பது குருமுகமாகத் தெளியத் தக்கதாகும். மிக நுண்ணிய இத்திருவைந்தெழுத்தினை,

“ஆகினவா நாப்பண் அடையா தருளினால்

வாசியிடைநிற்கை வழக்கு” (89)

எனவரும் திருவருட்பயனில் உமாபதி சிவம் உணர்த்தி யுள்ளமை கூர்ந்துணர்தற்பாலதாகும்.

“விண்ணினார் பணிந்தேத்த வியப்புறு மண்ணினார் மறவாது சிவாயவென்