பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

667


யாகிய ஆகாயத்திலே தியான நிலையில் அழுந்திக்கூர்ந்து நோக்குதலால் ஒளியுருவாய்த் திகழும் மந்திரப் பொருளாய் உயிர்கள் பற்றி நிற்றற்குரிய பற்றுக்கும் பற்றாய்ப் பரம் பொருளாகிய இறைவன் இருக்கும் இடம் நுண்ணிய ஞான வெளியாகிய திருச்சிற்றம்பலமே என்னும் மெய்ம்மையினை இறைவன் திருவருளால் தேர்ந்து அறிந்து கொண்டேன்” என்பது இத்திருமந்திரத்தின் வாயிலாகத் திருமூலர் அறிவுறுத்தும் அருளனுபவவுண்மையாகும்.

நெற்றிக்குநேரே புருவத்து இடைவெளி என்றது, ஆறாதாரங்களுள் ஆஞ்ஞை எனப்படும் இடத்தினை உற்றுப் பார்த்தல் - ஒருவழிப்பட இருந்து கூர்ந்து நோக்குதல். அங்ங்னம் தியானிக்கும் நிலையில் நாதாந்தத்தின் அஞ்செழுத்து மந்திர நிலையில் நின்று ஒளியுருவில் ஆடல் புரியும் இறைவனது திருக்கூத்துப் புலனாகும் என்பார், உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்’ என்றார். உயிர்கள் பற்றிய எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடு இறைவனே என்பது அறிவுறுத்துவார் பற்றுக்குப் பற்றாய் என்றார். ‘பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாயபெருமானே’ எனப் போற்றுவர் நம்பியாரூரரும். இத்தகைய அற்புதக் கூத்து நிகழ்தற்குரிய நிலைக்களமாகத் திகழ்வது நுண்ணிய பரவெளியக்கிய சிதாகாசமே என்பார், பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று தேர்ந்துகொண்டேனே' என்றார்.

ஆன்மாவின் இடமாக ஐந்தெழுத்தே திருமேனியாக நாதமுடிவிலே நற்றவத்தோர்கான இறைவன் நிகழ்த்தும் இவ்வற்புதத் திருக்கூத்தினைக் குருவின் அருளால் காணுதல் வேண்டும் என்பதனை,

"நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத் தஞ்செழுத்தால் உற்றுருவாய் நின்றாடல் உள்ளபடி - பெற்றிடநான் விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே தண்ணார் அருளாலே சாற்று” (உண்மை. 30)

என மாணவர் வினாவும் வினாவாகவும்,

“எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் சிட்டன்