பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் . . .

683


“சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கூடிச் சித்தும் அசித்தும் சிவசத்ததாய் நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்காத் துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல்லற்ற வர்களே” (2328)

என வரும் திருமந்திரப் பாடல்களில் மேற்குறித்த சைவ சித்தாந்தக் குறியீடுகளும் அவற்றின் விளக்கமும் இடம் பெற்றிருத்தல் காணலாம்.

மேற்குறித்த திருமூலர் திருமந்திரப் பாடல்களை யுளங்கொண்ட மெய்கண்டார், சத்தாவது இது, அசத்தாவது இது எனச் சத்தினையும் அசத்தினையும் வரையறுத்து உணர்த்தும் முறையிற் கூறியது,

“உணருரு அசத்தெனின் உணராதின்மையின்

இருதிறனல்லது சிவசத்தாமென இரண்டு வகையின் இசைக்கும் மன்னுலகே (சிவ.கு. 6)

எனவரும் சிவஞானபோதம் ஆறாஞ்சூத்திரமாகும். உயிர்க் குயிராகிய பரம்பொருள் அளவைகளால் அறியப்படும் இயல் புடையதென்றால், அவ்வாறு அறியப்படும் உலகப்பொருள் போல அழிபொருளாய் முடியும் என்பார், "உணர்உரு எனின் அசத்து’ என்றார். அம் முதற்பொருள் எவ்வாற்றானும் அறியப்படாத பொருளென்றால் அது முயற்கோடு போல இல்பொருளாய் விடும் என்பார், உணராது எனின் இன்மையின் என்றார். ஆதலால் உயிரறிவாற் சுட்டியறியப் படுதலும் ஒருவாற்றானும் அறியப்படாமையுமாகிய இவ்விரு பகுதியுமன்றிச் சுட்டுனர்வால் அறியப்படாமையும் சிவ ஞானத்தால் அறியப்படுதலும் ஆகிய இவ்விரண்டு வகையானும் சிவமாகிய சத்துப்பொருளாம் எனக்கூறுவர் மெய்யுணர்வில் நிலைபெற்ற சிவஞானிகள் என்பார், 'இருதிறன் அல்லது சிவசத்தாம் என இரண்டு வகையின் மன்னுலகு இசைக்கும்’ என்றார் மெய்கண்டார். முதல்வனுக் குரிய சிறப்பிலக்கணம் கூறும் சிவஞானபோதம் ஆறாஞ் சூத்திரமாகிய இது,

"சத்தும் அசத்தும் எவ்வாறெனத் தானுன்னிச்

சித்தம் ஒடுக்கிச் சிவனருள் கைகாட்டப்