பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

61


நச்சினார்க்கினியரும் வரைந்துள்ள பொருள் விளக்கமே தொல்காப்பியனார் கருத்தினைப் பிறழாது புலப்படுத்துவ தாகும். இத்தொடரில் பாலது ஆணை’ என்றது, உயிர்கள் செய்த நன்றுந்தீதுமாகிய வினைப்பயனை வினைசெய்த உயிர்களே தப்பாது நகரும்படி நுகர்விக்கும் இறைவனது ஆணையாகிய நியதியினை. இதனால் உயிர்கள் செய்யும் நலந்தீங்குகளாகிய இருவினைகளும் இன்பம் துன்பம் என்னும் பயனை விளைப்பன என்பதும் அவ்விருவகைப் பயன்களையும் வினை செய்த உயிர்களே தப்பாமல் நுகரும்படி நுகர்விக்கும் முதல்வன் ஒருவன் உளன் என்பதும் அங்ங்னம் முதல்வனால் வகுக்கப்பட்ட நியதியே பாலது ஆனை எனப்படும் என்பதும் நன்கு புலனாதல் காணலாம். பன்னெடுங்காலத்திற்கு முன் ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்திய இத்தத்துவவுண்மைகளை,

“செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுஞ் சேர்ப்பானும்

மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்”

எனவரும் பாடலிற் சேக்கிழார் நாயனார் வகைப்பட விரித்துரைத்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுனரத் தகுவதாகும்.

தொல்காப்பியனார் குறித்த 'பால்வரை தெய்வம்’ என்ற தொடர், 'பால்’ எனப்படும் ஊழ் வேறு, அதனை வினை செய்த உயிர்களே நுகரும்படி செய்யும் தெய்வம் வேறு என்னும் மெய்ம்மையினை விளக்குவதாகும். இங்குத் தெய்வம் என்றது இறைவனை. தெய்வத்தால் வகுக்கப் பெறும் முறைமையே பால் எனவும் வகை எனவும் ஊழ் எனவும் வழங்கப்படும். இந்நுட்பத்தினை,

"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.”

என வருந் திருக்குறளில் தெய்வப்புலவர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை காணலாம். ஊழ்வினை தானேயுருக்

7. சேக்கிழார், பெரியபுராணம், சாக்கியநாயனார் புராணம் 5. 8. திருக்குறள், 377.