பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


உடன்பாடாதல் தெளிவு. இதனையடுத்து வினையெனச் கட்டப்பட்டது ஊழ் என்பது எல்லாவுரையாசிரியர்க்கும் ஒத்த முடியாதலால், முன்னுள்ள பால்வரை தெய்வம்' என்பதற்கு ஊழ்வினை எனப்பொருள் கூறுதல் பொருந்தாதென்பது நன்கு துணியப்படும்.

'ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ட

மிக்கோ னாயினுங் கடிவரையின்றே”

(தொல். பொருள். நூ. 90)

என வருஞ் சூத்திரத்தில் ஊழ்முறையாகிய பாலின் இயல்பினையும் அதன் வகையினையும் அதனையிடமாகக் கொண்டு நிகழும் தெய்வத்தின் ஆணையினையும் ஆசிரியர் தொல்காப்பியனார் விரித்துக் கூறியுள்ளார். உயிர்களை அன்புடையாரோடும் இன்ப நுகர்ச்சிகளோடும் ஒன்று விப்பதுவும் வேறுபடுத்துவதும் எனப் பால் (ஊழ்) இருவகைப்படுமென்றும், அவற்றுள் ஒன்றுவித்தலால் மேன்மேல் உயர்த்தும் நல்லூழ் உயர்ந்தபால்’ எனச் சிறப்பித்துரைக்கப்படும் என்றும் அத்தகைய உயர்ந்த பாலினை இடமாகக் கொண்டு நிகழும் இறைவனது ஆனையினால் உருவுந் திருவு முதலிய நலங்களால் தம்முள் ஒப்புடையாராகிய தலைவனுந் தலைவியும் ஓரிடத்து எதிர்ப்பட்டுக் காண்பர் என்றும் மேற்காட்டிய களவியற் சூத்திரம் அறிவுறுத்துகின்றது. இங்குக் கூறப்பட்ட இருவகைப் பாலினும் ஒன்றுவிக்கும் பாலினை ஆகூழ் எனவும் வேறுபடுத்தும் பாலினைப் போகூழ் எனவும் ஊழ் என்னும் அதிகாரத்துள் திருவள்ளுவர். குறிப்பிட்டு விளக்கியுள்ளார். திருக்குறள் ஊழ் என்னும் அதிகாரத்திலும் இத்தொல்காப்பியச் சூத்திாத்திலும் இடம் பெற்றுள்ள குறிப்புக்களை ஒப்பிட்டு நோக்குங்கால் இச்சூத்திரத்தில் “ஒன்றே வேறேயென்று இருபால் என்றது ஆகூழ், போகூழ் என்னும் இருவகையூழினையே யென்பது நன்கு விளங்கும். எனவே பால்வரை தெய்வம் என்ற தொடர்க்கு ‘எல்லார்க்கும் இன்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது எனச் சேனாவரையரும்