பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


5) அருளுருநிலை, 6) அறியும்நெறி, 7) உயிர் விளக்கம், 8) இன்புறுநிலை, 9) அஞ்செழுத்தருள்நிலை, 10) அனைந் தோர் தன்மை எனப் பத்து அதிகாரங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இப்பத்துத் தலைப்புக்களும் இவ்வாசிரியர் இயற்றிய திருவருட்பயன் என்ற நூலிலும் இம்முறையே அமைந்துள்ளன. இவ்வமைப்பினை நுணுகி நோக்குங்கால் திருவருட் பயன் என்பது, திருவருட்பனுவலாகிய தேவாரத் திருமுறையின் பயனாகச் சைவசித்தாந்தத் தத்துவவுண்மை களைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் நோக்கத்துடன் உமாபதி சிவாசாரியாரால் இயற்றப்பெற்ற சைவசித்தாந்த சாத்திரம் என்பது நன்கு தெளியப்படும்.

தேவாரத் திருப்பதிகங்களில் அறிவுறுத்தப்பெறும் நற்பொருள்களை நாள்தோறும் சிந்தித்துனரும் முறையில் தொகுக்கப்பெற்றுள்ள அகத்தியர் தேவாரத் திரட்டு, திருமுறைத் திரட்டு என்னும் இத்தொகுப்புக்களின் அமைப்பினைக் கூர்ந்து நோக்குங்கால், நம் முன்னோர்கள் தேவாரத் திருப்பதிகங்களின் பொருள் நலங்களைக் குருவருள் முதலிய எட்டு வகையாலும் பதிமுதுநிலை முதலிய எட்டிறந்த பலவகையானும் பகுத்து ஆராய்ந்துள்ளார்கள் என்பது நன்கு புலனாகின்றது. தேவாரத் திருப்பதிகங்கள், திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகளின் சாரமாக அமைந்தனவே சிவஞான போதம் முதலிய சாத்திரங்கள் ஆகும்.

சைவ சமய குரவராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரர், மானிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் பெற்ற செம்புலச் செல்வர்கள் ஆதலால் அப்பெருமக்களைப் பண்டை நற்றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் தொண்டர் எனவும் சிவாகமங்களிற் கூறப்பட்டபடி கால்முறையினன்றி இறைவன் தானே எளிவந்து அவர்களை ஆட்கொண்டு சிவகதியிற் சேர்த்தருளினன் எனவும் மெய்ந்நூல்கள் கூறும் கொள்கைகளால் வேறுபாடுடைய எல்லாச்சமயங்களாலும் வழிபடப்பெறும் இறைவன் மாதொருபாகனாகிய சிவபெருமானே எனத்தெளிந்து