பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

729


ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தாயுனை நானுந் தொழுவனே' (5.91.3)

என ஆளுடைய அரசரும்,

"நத்தார்புடை ஞானன்” (7. 80.1)

“ஞானமூர்த்தி நட்டமாடி’ (7. 81, 7)

என ஆளுடைய நம்பியும் குறித்துள்ளமை இங்கு மனங் கொளத்தகுவதாகும்.

"அறிதல் ஒப்புமையால் சரியை முதலிய நான்கும் ஞானமேயாம் எனவும், ஆயினும் அரும்பு மலர் காய் கனியாதல் போலச் சோபான முறையாகிய தம் முள் வேறுபாட்டால் முறையே ஒன்றற்கு ஒன்று அதிகமாய், நான்காம் எண்ணு முறைமைக் கண் நின்ற ஞானமே முடிவாகிய ஞானமாம் எனவும் எனவே இந்நான்கினும் அறிவு நுணுகி வளர வளர, அறியாமையை விளைக்கும் மலமும் அம்முறையே தேய்ந்து தேய்ந்து வருதலின் அவற்றின் பயனாகிய சாலோகம் முதலிய நான்கும் முத்தியேயாம் எனவும் ஆயினும் அம்மலநீக்கமும் அவ்வாறு நிகழும் சோபான முறையானே அவை ஒன்றற்கு ஒன்று ஏற்றமாய், அவற்றுள் நான்காம் எண்ணுமுறைமைக்கண் நின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாம்” எனவும் கூறுவர் சிவஞானமுனிவர்.

இறைவனை அடைதற்குரிய இந்நால்வகை நெறிகளையும் முறையே, தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என வழங்குவர் சான்றோர். இந்நால்வகை நெறிகளையும் கடைப்பிடித்து ஒழுகுவோர் முறையே சாலோகம் (இறைவன் உலகினையடைதல்), சாமீபம் (இறைவனது அருகே இருத்தல்), சாரூபம் (இறைவனது உருவினைப் பெறுதல்) என்னும் பதமுத்தி யையும், சாயுச்சியம் (இறைவனுடன் இரண்டறக் கலத்தல்) என்னும் பரமுத்தியையும் அடைவர் எனமெய்ந்நூல்கள் கூறும். இங்குக்குறித்த நால்வகை மார்க்கங்களையும் முறையே மகன்மைநெறி, தொண்டுநெறி, தோழமை நெறி,