பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

735


శక

ஆதிப்பிரானும்அணிமணிவண்ணனும் ஆதிக்கமல மலர்மிசை மாயனும் சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித்துலகம் பிணங்குகின்றார்களே”

(திருமந்திரம் 104)

எனத் திருமூலதேவரும் அருளிய வாய்மொழிகளால் இனிது புலனாம்.

இனி ஒருவனாகிய இறைவன் தொழில்வகையால் மூவுருவினனாய் மூன்று பெயர்களில் வைத்துப் போற்றப் பெற்ற உண்மை நிலையினையுணராதார் ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனியே உரியவராக அயன் அரி அரன் என்னும் மூவரை வேறுபடக் கொண்டு வழிபடுவாராயினர். அங்ங்ணம் வழிபடப்பெறும் “பிரமவிட்டுனு உருத்திரர் களிடத்து முதல்வனுடைய சத்திகள் பதிந்து நின்று செலுத்துதலால் அவருடைய உருவங்கள் முதல்வனுரு வோடு ஒப்ப வைத்துக் கூறப்படும். அவ்வாறு சத்திகளாற் செலுத்தப்படாது பிரமன் முதலியோரே படைப்பு முதலிய தொழில்களைச் செய்வரெனக் கூறின் முதல்வனொருவன் வேண்டுவதில்லை. ஆதலால் முதல்வனாகிய சிவனே ஐந்தொழில்களையுஞ் செய்வன். அவனது சத்திகளால் அதிட்டிக்க (செலுத்த)ப் பட்டுப் பிரமன் முதலியோர் ஒவ்வொரு தொழிலைச் செய்வர்” என்பது,

"அயன்றனை யாதியாக அரனுருவென்பதென்னை

பயந்திடுஞ் சத்தியாதிபதிதலாற் படைப்புமூலம் முயன்றனர் இவரேயாயின் முன்னவன் தன்னை முற்றும் நயந்திடும் அவன் இவர்க்கு நண்ணுவதொரோ

வொன்றாமே” (சித்தியார், சுபக். 80)

எனவரும் திருவிருத்தத்தால் இனிது விளங்கும்.

'உயிரணவமுழுவதும் அழிதருவகை நினைவொடு முதலுருவியல்பரன்` என அழிக்குங்கடவுளே முதலிற் படைக்குங்கடவுளும் ஆவன் என ஆளுடையபிள்ளையார் அருளிச் செய்ததனை யுளங்கொண்டு, உலகமெல்லா