உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள்

745


இன்பம் அளிக்கவல்ல பேரருளும் பேரறிவும் பேராற்றலும் ஒருங்கேயுடைய இறைவன் ஒருவனே என்பதும் திருமுறையாசிரியர்கள் துனிபாகும். இந்நுட்பம்,

"இருளற நோக்கமாட்டாக் கொத்தையேன்” (4-69-1)

{{ - - 8. * ★ -

இருளறுத்து நின்று, ஈசனென்பார்க்கெலாம் அருள்கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே (5-41-8)

"இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி (6-54-4)

எனவரும் வாகீசர் வாய்மொழிகளால் இனிது விளங்கும். இங்ஙனம் உயிர்களின் அறிவினை அநாதியே மறைத்து நிற்பதாய் ஆன்மாக்களை அணுத்தன்மைப்படுத்தி நிற்கும் ஆணவமலமாகிய உள்மாசினையே தெய்வப்புலவர் திருவள்ளுவரும் சைவத் திருமுறையாசிரியர்களும் இருள் என்ற சொல்லால் வழங்கியுள்ளனர். இந்நுட்பத்தினைத் தெளியவுனர்ந்த உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய திருவருட்டியனில் ஆணவம் என்ற பெயரால் வழங்கப்படும் மூலமலத்தின் இயல்பினை விரித்துரைக்கும் அதிகாரத்திற்கு 'இருள்மலநிலை எனப் பெயரிட்டு வழங்கியுள்ளார்.

ஆணவமலம் என்பது, எண்ணிறந்த உயிர்கள் தோறும் கூடிநின்று அவற்றின் அறிவினை மறைத்தும் தான் ஒன்றாயிருப்பது, உயிர்களின் பக்குவமின்மை, பக்குவம் ஆகியவற்றுக்கு ஏற்ப அவரவர் இடங்களிலே மறைத்து நின்று அந்தந்த ஆன்மபோதங்களின் மீட்சியிலே நீங்குவதாயிருக்கிற தன் செயல்வகையாகிய எண்ணிறந்த ஆற்றல்களையுடையது, செறிந்த இருளும் வெளியென்று சொல்லும்படி இருளாய் நின்று உயிர்களுக்கு மிக்க மறைப்பினைச் செய்வது, செம்பினுடன் கூடியுள்ள களிம்பானது அந்தச் செம்பு உள்ள அன்றே அதனை மறைத்து உள்ளும் புறம்பும் கலந்து அதன்வெட்டுவாய்தோறும் நின்றாற்போல, உயிரறிவோடுங் கலந்து மறைத்து நிற்கிற அழியாத அனாதிமலமாய் உயிர் களின் விழைவு அறிவு செயல் என்னும் மூவகையாற்றலும் சிறிதும் நிகழாதபடி தடைசெய்து நிற்பதாகும். இதன் இயல்பினை,