பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

779


ஒன்றே என்பதனை அறிவுறுத்துகின்றது. ஒருவனே தேவனும் என்றார் திருமூலர். இங்ங்னம் ஒருவனாகிய முதல்வன் தனது ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மையப்பராக விருந்து உயிர்கட்கு அருள்புரியுந் திறத்தினை உணரப்பெற்ற மனிவாசகப் பெருந்தகையார் ‘அம்மையே அப்பா ஒப்பிலாமணியே என அம்முதல்வனை அழைத்துப் போற்றியதுடன் தாம்கண்ட தெய்வக்காட்சியினை,

"தோலுநதுகிலுங்குழையுஞ் சுருள்தோடும்

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் குலமுந்த்ொக்க வளையுமுடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துதாய் கோத்தும்பீ

எனவரும் திருப்பாடலில் புனைந்து போற்றியுள்ளார். சீர்காழிப்பதியில் பிரமதீர்த்தக்ரையில் நின்று கொண்டு திருத்தோணிச் சிகரம்பார்த்து “அம்மே அப்பா என அழுதருளிய கவுணியப்பிள்ளையார்க்கு இறைவன் அம்மை யப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப்பாலை அருத்தியருளிய திருவருட்செயலும், இவ்வாறே திருத் தொண்டத்தொகையடியார் பலர்க்கும் இறைவன் அம்மையப்பராகத் தோன்றியருள்புரிந்த திருவருட் செயல் களும் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இவ்வுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது,

'அம்மையப்பரேயுலகுக்கம்மையப்ப ரென்றறிக

அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்

எல்லாவுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்

அல்லால் போல்நிற்பர் அவர் (1) என வரும் திருக்களிற்றுப்படியார் மங்கலவாழ்த்துப் பாடலாகும்.

இறைவன் குருவாகத் திருமேனிகொண்டு எழுந்தருளிவந்து தம்மை ஆண்டு கொண்டருளிய திறத்தை,

“அருபரத்தொருவன் அவனியில் வந்து