பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

799


‘ஒருவனுமே என்றமையால் ஒருவன் என்னும் ஒருவன்’ ஆகிய இறைவனும் “பல” எனவே அவனல்லாத உலகுயிர்களும், ஆகி’ எனவே அவற்றோடு அத்துவிதமாய்க் கலந்து விளங்கும் இறைவனது தன்மையும் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இக்கருத்தினை

“நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்

எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே’

(திருவாசகம் திருச்சதகம் 46)

என முன்னரும் அடிகள் வற்புறத்தியுள்ளமை இங்கு ஒப்பவைத்து உணர்தற்பாலதாகும்.

இறைவன் எல்லாப் பொருள்களுமாய்க் கலந் துள்ளான் என்று கூறிய அளவில் இறைவன் ஒருவனே உலகமாகவும் உயிர்களாகவும் விரிந்து தோன்றுகின்றான், அவனையன்றி வேறொரு பொருளும் இல்லை எனப் பிறர் பிறழவுனராதவாறு,

"நிரந்த ஆகாயம் நீர்நிலந்தீ கால்ஆய்,

அவையல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே”

எனவும்,

“பெண்ணாகியானாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி”

எனவும் அம்முதல்வன் கலப்பினால் ஒன்றாயும், பொருட் டன்மையால் வேறாயும் உயிர்க் குயிராதற்றன்மையால் உடனாயும் நிற்குந் திறத்தினைத் திருவாதவூரடிகள் விளக்கிய திறம் ஈண்டு நினைத்தற்குரியதாகும். இறைவன் கலப்பினால் உலகுயிர்களாக நிற்குந் திறத்தினை நின்ற திருத்தாண்டகத் திலும், பொருட்டன்மையால் அவற்றின் வேறாதலை ‘விரிகதிர் ஞாயிறல்லர்’, ‘மண்ணல்லை விண்ணல்லை’ முதலிய திருப்பாடல்களிலும் திருநாவுக்கரசர் அறிவுறுத்தி யுள்ளமை முன்னர்க் கூறப்பட்டது.

விண்ணிற் கதிரவன் எழுந்த நிலையில் உலகிற்