பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/826

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

817


உயிரும், ஒருபொருளை அறியுங்கால் இறைவனது பேரறிவானது, உயிரறிவோடு பிரிப்பின்றிக் கலந்து நின்று அப்பொருளை உயிர்க்கு அறிவித்துத் தானும் அதனோடு உடனிருந்து அறிந்து உதவும்.

இங்ங்னம் இறைவன் உயிர்கட்குச் செய்யும் உதவி, உயிர்கள் பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள கட்டுநிலையிலும் பாசம் நீங்கி இன்புறும் முத்தி நிலையிலும் ஒப்ப நிகழும் என்பர். தீயானது ஒருபொருளில் தங்கிநின்று சுட்டு ஒன்று வித்தலாகிய தன் தொழிலை நிகழ்த்துமாறுபோல, இறைவனும் ஆன்மாக்களிடத்துப் பிரிப்பின்றித் தங்கி நின்றே அவற்றின் பாசங்களை அகற்றி அருள்புரிதலாகிய தன் தொழிலை நிகழ்த்துவன். இவ்வாறு உயிர்க்குயிராய் உடனின்று உதவிபுரியும் இறைவனது பெருங்கருனைத் திறத்தை யுணர்ந்து தம் செயலெல்லாவற்றையும் கைவிட்டு இறைவனை இடைவிடாதெண்ணி அவனருளாலல்லது ஒன்றையுஞ் செய்யாராகிய திருமாளிகைத்தேவர், உயிர்கட்குக் கருணையால் உபகரித்துவரும் இறைவனது உரிமையை நோக்குந்தோறும் அம் முதல்வன் பால் வைத்துள்ள பேரன்பு அடங்காது மீதுர்தலின் அப்பேரன்பே தானாக விளங்கித்தோன்றும் பேரானந்தத்தை நுகர்ந்து மகிழும் நிலையில் ஒளிவளர்விளக்கே யெனத்தொடங்கும் திருவிசைப்பாத் திருப்பதிகத்தை உளங்குளிர்ந்து பாடி யுள்ளார்.

இறைவனது பொருள்சேர் புகழை வாயாரப் பாடிப் போற்றுதற்கும் மனத்தால் நினைத்தற்கும் அம்முதல்வனுக்குத் தொண்டுபட்டு வணங்குதற்கும் அவனோடு ஒன்றி இன்புறுதற்கும் அவ்விறைவனது காட்டும் உபகாரமேயன்றி அம்முதல்வன் உயிர்ோடு ஒன்றித்துநின்று காணும் உபகாரமும் இன்றியமையாதது என்னும் இவ்வுண்மையை வற்புறுத்துவது ஒளிவளர்விளக்கே எனத் தொடங்கும் இத் திருவிசைப்பாத் திருப்பதிகம் ஆகும்.

“காணுங்கண்ணுக்குக் காட்டும் உளம்போல்

癸s邸言 வுள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே” (சிவ. கு 11)

சை, சி. கா. வ. 5.2