பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் சிவஞானபோதச் சிற்றுரையுள், “உயிர் ஒன்றனை யறிதல், முதல்வன் உடனின்று அறிதலையின்றி அறிவித்தல் மாத்திரையான் அமையாது என்பது, 'தொண்டனேன் நினையுமா நினையே’, ‘விரும்புமா விரும்பே', 'தொடருமா தொடரே', 'நுகருமா நுகரே என்றிவ்வாறு முத்திபற்றி யோதிய திருவாக்குக்களானும் அறிக” என மாதவச் சிவஞான முனிவர் குறித்துள்ளமை இங்கு உணர்ந்து இன்புறத் தகுவதாகும்.

'இணங்கிலாவீசன்’ என்னும் முதற்குறிப்புடைய திருவிசைப்பாத் திருப்பதிகத்தில், சிவநெறியையும் சிவனடியார்களையும் இகழ்ந்துரைக்கும் பேய்மக்களைத் தம் கண்கள் கானா என்றும் வாய் அவரோடு உரையாடாது என்றும் திருமாளிகைத்தேவர் கூறியுள்ளார்.

“மறப்பித்துதம்மை மலங்களின் வீழ்க்குஞ்

சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - அறப்பித்துப் பத்தரினத்தாய்ப்பரனுணர்வினாலுணரும் மெய்த்தவரை மேவாவினை”

(சிவஞானபோதம் - வெண்பா 75)

என மெய்கண்ட தேவர் அறிவுறுத்தருளிய சிவபத்தர் இலக்கணம் திருமாளிகைத் தேவர் அருளிய இத்திரு விசைப்பாப் பதிகத்தில் இடம்பெற்றுள்ளமை காண்க.

காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறுபோல அடியார் திருமேனியிற் காணப்படும் சிவசாதனமாகிய திருவெண்ணிற்றுத் திருவேடம் மெய்யுணர் வுடையாரை வசீகரித்து இன்பஞ்செய்யும் என்பதனை,

"சேலுங்கயலுந்திளைக்குங்கண்ணாரிளங்

கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணிமார்பிலங்குமென்று

புண்ணியர் போற்றிசைப்ப" (திருப்பல்லாண்டு)

எனவரும் திருப்பல்லாண்டில் சேந்தனார் குறித்துள்ளார்.