பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

819


“காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடைசாந்து அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல மெய்யுணர்வுடையாரைக் காட்சி மாத்திரையின் வசீகரித்து இன்பஞ்செய்தல் பற்றித் திருவேடத் தையும் சிவாலயத்தையும் என்று உபசரித்தார். அது 'சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங் குங்குமம், போலும் பொடியணிமார்பிலங்குமென்று புண்ணியர் போற்றிசைப்ப என்னுந் திருவாக்கானும்அறிக’ (சிவஞானபோதச் சிற்றுரை, சூ. 12) எனச் சிவஞானமுனிவர் கூறும் விளக்கம் இங்கு எண்ணத்தகுவதாகும்.

தில்லைச்சிற்றம்பலவர் திருவருளால் 'உலகெலாம்’ எனத் தோன்றிய அருள் மொழியினை முதலாகக் கொண்டு அருள்மொழித்தேவராகிய சேக்கிழாரடிகளால் அருளிச் செய்யப்பெற்றது திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புரானமாகும். பன்னிரண்டாந்திருமுறையாகிய இது,

“உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்.

நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்”

என்னும் திருப்பாடலை முதலாகக் கொண்டு தொடங்கு கின்றது. உயிர்கள் எல்லாவற்றாலும் மனத்தால் உணர்தற்கும் வாய்மொழிகளால் ஒதுதற்கும் அரியவனும், பிறைத்திங்கள் உலவுதற் கிடனாகிய கங்கை நீர் நிறைந்த சடையுடன் பொருந்திய திருமேனியையுடையவனும் அளவில்லாத பேரொளிப் பிழம்பாகத் திகழ்பவனும் ஞானமயமான தில்லைச் சிற்றம்பலத்திலே அருட்கூத்தியற்றுபவனும் ஆகிய இறைவனுடைய செந்தாமரை மலர்போலும் சிலம்பணிந்த திருவடியினை வாழ்த்தி வணங்குவாம்” என்பது இதன் பொருளாகும் -

இச்செய்யுள் தெய்வவணக்கமும் செயப்படு பொருளும் எய்தவுரைக்குந் தற்சிறப்புப் பாயிரமாகவும் இந் நூலின்மங்கல வாழ்த்தாகவும் அமைந்துள்ளது. இதன்கண் 'உலகு எலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன், நிலவு உலாவிய