பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

823


"நாணனும் அன்பும் முன்பு நளிர்வரையேறத் தாமும் பேணுதத்துவங்கள் என்னும் பெருகு சோபானமேறி ஆணையாஞ் சிவத்தைச் சாரஅணைபவர் போல ஐயர் நீனிலை மலையையேறி நேர்படச் செல்லும் போதில்’

(பெரிய கண்ணப்பு 103)

4&

எனவரும் பாடலில் ஆசிரியர் விளக்கியுள்ளார். “தம் தோழனாகிய நாணன் என்பவனும் தாம் குடுமித்தேவர்.பால் வைத்த அன்பும் தமக்கு முன்னே குளிர்ச்சியுடைய மலையின் மேல் ஏறிச்செல்ல, உயிர்களைப் பேணிவளர்க்கும் தத்துவங்கள் என்னும் (அறிவு) பெருகும் படிகளை, அருளாகிய சத்தியுடன் பிரிவின்றியுள்ள சிவபரம் பொருளைச் சார அனைபவர்களாகிய சிவயோகிகளைப்போலத் திண்ணனாராகிய வேட்டுவத் தலைவர் நீண்ட நிலைமை யினையுடைய திருக்காளத்தி மலையின்மேல் ஏறிக் குடுமித் தேவரை நேர்படக் காணச்சென்றார்” என்ற செய்தி இச் செய்யுளிற் குறிக்கப்பெற்றது.

சுத்தம் அசுத்தம் என்னும் இருவகை மாயையி ளின்றும் தோன்றிய நிலம் முதல் சிவம் ஈறாகவுள்ள தத்துவங்கள் முப்பத்தாறும், சகலநிலையில் உயிர்களின் அறிவு விழைவு செயல் என்பவற்றின் வளர்ச்சிக்குக் கருவியாய் அவ்வுயிரில் உணர்வு முதலியவற்றை வளர்த்தலின் பேணு தத்துவங்கள்’ எனப்பட்டன. இவை எல்லாவுயிர்களுக்கும் போக நுகர்ச்சியைக் கொடுப்பனவாய் ஊழிக்காலம்வரை நிலைத்திருக்கும் உண்மைப்பொருள்களாதலின் தத்துவம் எனப் பெயர் பெற்றன. நிலமுதல் நாதமீறாகவுள்ள இத் தத்துவங்கள் அனைத்தையுங்கடந்து மேற்சென்று தத்துவங் கடந்த செம்பொருளாகிய இறைவனை அனைதற்கு இத் தத்துவங்கள் படிபோன்று மேன்மேல் விரிவுடையனவாக அமைதலின் ‘தத்துவங்கள் என்னும் பெருகுசோபானம்’ என்றார். சோடானம் - படி, சிவபரம் பொருளாகிய இறைவன் தனது அருளாகிய சத்தியுடன் நீக்கமின்றி நிற்றலால் சிவமும் சத்தியும் ஒருபொருளே என்பது உணர்த்துவார். ஆணையாம் சிவம் என்றார். ஆனையின் நீக்கமின்றி நிற்குமன்றே (சிவ. சூ. 2) எனவரும் சிவஞான போத