பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

826

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவும் வரும் தொடர்களில் ஐவகை மலங்கள் குறிக்கப் பெற்றுள்ளமை உய்த்துணரத்தகுவதாகும்.

இருவினைகளைச் செய்கின்ற உயிர்களும் அவ்வுயிர் களாற் செய்யப்படும் நன்றுந் தீதுமாகிய வினைகளும், அவ்வினை காரணமாக உயிர்களைச் சேர்தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகளும், உயிர்கள் செய்த வினைப்பயன்களைச் செய்த உயிர்களே நுகரும்படி நியமித்து நுகரச் செய்பவனாகிய இறைவனும் எனச் சைவசமயச் சான்றோர்களால் ஆராய்ந்து நிச்சயிக்கப்பட்ட பொருள்கள் நான்காகும். இவ்வுண்மையினை,

"செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுங்

கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள்

எனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறியல்ல வற்றுக்கில்லையென உய்வகையாற் பொருள் சிவனென்றருளாலே

உணர்ந்தறிந்தார்” (பெரிய சாக்கிய.5)

எனச் சாக்கியநாயனார் இறைவனருளால் உணர்ந்ததாகச் சேக்கிழார் அறிவுறுத்தியுள்ளார். அருண்மொழித்தேவர் சைவசமயத்தின் துணிபொருளாக அறிவுறுத்திய இப்பொருள்

வகையினை,

"செய்வானுஞ் செய்வினையும் சேர்பயனுஞ் சேர்ப்பானும்

உய்வா னுளனென் றுணர்” (திருவருட்டயன் 43)

என உமாபதி சிவாசாரியார் எடுத்தாண்டுள்ளமை மனங் கொளத்தகுவதாகும். இதன்கண் செய்வான்’ என்றது, உயிரினை. உயிர்களாற் செய்யப்படும் நன்றுந்திதுமாகிய வினைகள், செய்வினையும்’ எனப்பட்டது. சேர்பயன்’ என்றது, தாம் செய்த நல்வினை தீவினைகள் காரணமாக உயிர்களைச் சேர்தற்குரிய இன்ப துன்பங்க ளாகிய நுகர்ச்சிகளை சேர்ப்பவன்' என்றது, உயிர்கள் செய்த இருவினைப் பயன்களைச் செய்த உயிர்களே நுகர்ந்து கழிக்கும்படி நியமித்து நுகரச் செய்பவனாகிய இறைவனை.