பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

329


இறைவனது திருவருளில் தோய்வன. இவ்வுண்மையினை,

"திங்கள்சேர் சடையார்தம்மைச் சென்றவர் காணாமுன்னே
அங்கணர் கருணைகூர்ந்த அருள்திரு நோக்கம் எய்தத்
தங்கியபவத்தின் முன்னைச் சார்புவிட்டகல நீங்கிப்
பொங்கிய ஒளியினிழல் பொருவிலன் புருவமானார்”

(பெரிய கண்ணப்பர். 104)

எனவும்,

“அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள்
நோக்கால்

முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க்கருள்
புரிவான்

பொன்மலை வல்லியுந்தாமும் பொருவிடைமேல்
எழுந்தருளிச்

 சென்னியிளம் பிறைதிகழச் செழும்பொய்கை
மருங்கணைந்தார்" (பெரிய சம்பந்தர். 64)


எனவும் வரும் திருப்பாடல்களில் அருண்மொழித்தேவர் இனிது புலப்படுத்தியுள்ளார்.

       தாள் தலை என்னும் இவ்விரு சொற்களும் புணருங்கால் நிலைமொழியீற்றில் நின்ற ளகரமும் வருமொழி முதலில் வந்த தகரமும் தம்மிற் பிரித்தறிய வொண்ணாதவாறு டகரமாகிய ஒரெழுத்தாக ஒன்றுபட்டு நிற்கும். அதுபோல ஆன்மாவும் சிவமும் அவை எனவும் தான் எனவும் வேறு பிரித்துணரவொண்ணாதவாறு அவையே தானேயாய்ப் பிரிவற ஒன்றாகிய நிலையில் ஆன்மாவின்கண் நிகழ்வதே சிவாநுபவம் ஆகும். இதனை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

“தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக்

கூடலை நீ ஏகமெனக் கொள்”

(74)

எனவரும் திருவருட்பயனாகும். இவ்விளக்கம்,

“தங்கள் பெருமான் அடிநீழல் தலையாம் நிலைமை சார்வுற்றார்”

(பெரிய முருக. 13)