பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியனார் கூறும் வழிபாட்டு நெறிகளும்...

75


மூவறிவுயிர்கள் எனப்படும். நண்டு, தும்பி யென்பன முற்குறித்த மூவறிவுடன் கண்ணுணர்வும் ஒருங்குடையன வாதலின் நாலறிவுயிர்கள் எனப்படும். நாற்கால் விலங்கும் பறவையும் முன்னர்க்கூறிய நாலறிவுடன் ஒசையறிதலாகிய செவியுணர்வும் ஒருங்கு பெற்றமையின் ஐயறிவுயிர்கள் எனப்படும். முற்குறித்த ஐம்பொறியுணர்வுகளோடு நன்றுந் தீதும் பகுத்துனரும் ஆறாவதறிவாகிய மனவுணர்வு மக்களுயிர்க்கே சிறப்புரிமையுடையதாதலின் மக்கள் ஆறறிவுயிர் எனப்படுவர். இங்கு வகைப்படுத்துணர்த்திய அறுவகை யுயிர்ப்பாகுபாடுகளுள் எடுத்துரைக்கப் பட்டனவேயன்றி அவற்றின் நிலையினவாகவும் ஒத்த பிறப்பினவாகவும் வருவன பிறவும் உள்ளன என்பார் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' என்றார். இங்ங்னம் உயிர்த்தொகுதியினை அறுவகையாகப் பகுத்துரைக்கும் பகுப்பு முறை தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் நெறிப்படுத்தப்பட்ட தொன்மை வாய்ந்தது என அறிவுறுத்துவார் நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்றார்.

இவ்வாறு அறிவின் திறம்பற்றி அறுவகையாகப் பகுத்துரைக்கப்படும் எல்லாவுயிர்கட்கும் இன்.த்தின்பால் வேட்கை நிகழ்தல் இயல்பு என்பதனை,

“எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉ மேவற்றாகும்”

எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார். எனவே அறிவும் விருப்பமும் அவைபற்றிய செயல்வகையும் ஆகிய மூவகையாற்றல்களும் ஒருங்குடையன உயிர்கள் என்பதும் உயிர்கட்கமைந்த ஆற்றல்கள் அவை பெற்றுள்ள கருவிகரணங்களின் எல்லையுட்பட்டு அடங்கும் குறைவுடையன என்பதும் ஒருவாற்றால் ஆசிரியர் உய்த்துணர வைத்தாராயிற்று.

அறியும் ஆற்றல் வாய்ந்த உயிரும் அறியும் தன்மை

22. தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், 28.