பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மனைவியென்னும் அவ்விருவர் உள்ளமும் அன்பினாற் சிறந்து பிறப்புத்தோறும் நல்வினைக்கண்ணே ஒற்றித்து நிற்றலால் உயர்ந்ததன் மேற்செல்லும் மன நிகழ்ச்சி அவ்விருவர்க்கும் உண்டாகிய மறுபிறப்பினும் அவ்விருவரை யும் ஒன்று சேர்க்கும் பாலாய் ஆகூழ் எனப்படும். இப்பிறப்பிற் கணவனும் மனைவியுமாகக் கலந்துவாழ்வோர் தம்முள் அன்பின்றிப் பினங்கியொழுகுவராயின், அவரிடையே தோன்றிய மனவேறுவாடு, அவ்விருவரையும் மறுபிறப்பிற் கூடாதவாறு பிரிக்கும் பாலாய் வேறுபடுத்துவதாகும். இது போகூழ் எனப்படும். அன்புடையார் இருவருள்ளமும் பிறப்புத்தோறும் ஒன்றிய நல்வினையின் உயர்ச்சியினாலே அவ்விருவரையும் மறுபிறவியிலும் கூட்டுவதாகிய உயர்ந்த நல்லூழின் ஆணையினாலே ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்படுவர் என்பது தமிழ் முன்னோர் துணிபாகும். இவ்வுண்மையினை,

“ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ட”

எனவரும் சூத்திரத்தினாலும், பொறியின் யாத்தபுணர்ச்சி’ என்ற தொடராலும் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். இவ்வாறு தொல்காப்பியனார் ஊழின்திறத்தை விரித் துரைத்த லால் அவ்வூழ் முதிர்ந்து பயனளித்தற்குரிய மறுபிறப்புண் டென்பதும் அவர் தமக் குடன்பாடாதல் நன்கு தெளியப்படும்.

கணவனும் மனைவியுமாக மனையின்கண் இருந்து இல்லறமென்னும் நல்லறத்தினைச் சிறப்புற நிகழ்த்தும் கடமையினை மேற்கொண்ட காதலர் இருவரும் ஐம்புல வின்பங்களை ஆரத் துய்த்து மனவமைதிபெற்ற நிலைமைக்கண் மனையறத்திற்குப் பாதுகாவலாகிய ಉತ್ತ5TTು நிறைவு பெற்ற அறத்தையே விரும்பிய சுற்றத்தாருடன் உயிரினுஞ் சிறந்த முழுமுதற்பொருளாகிய செம்பொருளின் அருளியல்பினை உணர்ந்தோர்பாற் கேட்டுணர்ந்து, ஒருநெறிய மனத்திற்கொண்டு போற்றி