பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசுகீர் உருசியன் இணைந்தே பயணம் மேற்கொள்வர்: போரில் வீரத் தோழராய்த் துணிவர்பற் றார்வத்தார். மாசில் விருந்தில் மாப்பே றுகளிலும் இணைந்துவப்பர், மானச் சாவிலும் மண்ணில் ஒன்றாய்ப் புதைந்திடுவர்.

வலிமை புகச்ேவ் - சலாவத் தன்னைக் கண்டதுமே ஒருவரை ஒருவர் உடன்பிறப் பாகத் தழுவினரே. பொலியும் உன் உயிரும் முன்பே நட்புணர்வு ஆழ்ந்ததனால், பொங்கிற்று அன்பில் தோய்ந்துடன் பிறப்பே உருசியனே.

உருசியன் அல்லேன், உருசிய மண்ணில் உதித்தவன்நான், சோவியத்து மண்ணில் உதித்த உண்மை மகன்நானே. ஒருமையில் வாழ்வோம், வானின் உச்சி மின்னலிடும் உயர்மலை மீதில் ஒன்றாய் நாமும் ஏறிடுவோம்.

என்உயி ருள்ளே இன்இள வேனில் உதயம்,எழும், என்கண் ணுள்ளே செங்கதிர் இன்னொளி ஏமுறுமே. என்நெஞ் சுள்ளே நூற்றாண் டுகளாய் ஒலித்துயரும் ஈடினை அற்ற உலகின் இன்பப் பாட்டிசைக்கும்.

மாந்தன் உறையும் உண்மை வலிவை, வாழ்வின்ப மகிழ்வை வேட்டேன் அறிய விழைவேன்; பிறவேண்டேன். ஏந்தும் எல்லாக் காலமும் நிற்கும் இவற்றுக்கே ஒ! என் உருசியப் பிறப்பே உளத்தின் நன்றியடா.

நீயே உணவில் சுவையும் நீரும் உவந்தளித்தாய், நீயே கரம்பை விளைநிலம் ஆக்கி நிறைத்துயிர்த்தாய், நீயே எம்மவர் மகிழ்வில் திளைக்க நிமிர்வித்தாய், நீயே மண்ணில் எம்மைப் பிறரொடும் இணைத்தாயே.

உருசியன் அல்லேன் உருசிய மண்ணில் உதித்தவன்நான், உருசியக் காற்றை உயிர்த்த தனாலே உவக்கின்றேன். ஒருபத்து உயிர்கள் உதவீர்: என்றன் ஒருவாழ்க்கை ஒருபத்து உயிர்க்கும் பிறபல வுக்கும் ஒப்பாமே!

77