பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரின் தீத்தழல் களங்கள் கண்டது; புயல்கள் வீசிய பாதை; பின்னரோ நேரும் நாள்களில் அமைதி கண்டது; வீடுகள் தொழிலின் கூடம் எங்குமே.

நிலத்தி ருந்துபல் சுனைகள் பொங்கியே நெடுங்கடல் சென்று பாய்தல் போலவே, உயர்ந்து உயர்ந்துபல் மக்கள் பொங்கினர் ஊர்கள் தோறும்நல் நகர்கள் தோறுமே.

இல்இ ருந்துஉறை வாழ்வை எள்ளியே எழுந்து பொங்கிடும் அன்பு நெஞ்சொடும் வெல்லும் ஒருகுறி நோக்கி ஏகிய வீரர் தம்மை அவ்வழி மறக்குமோ?

ஈதென் செவ்வழி; வேறு வேண்டிலேன்; யானும் மக்களுள் ஒருத்தி ஆகுவேன். ஒதும் யாவரும் உடன்பி றப்பினர்; உறைகு வேன்.அவர் வாழ்வில் ஒன்றியே.

யார்க்கும் கீழ்ப்படேன்; தாழ்வைத் தள்ளுவேன்; இடிமு ழக்கம்என் பாட்டும் வாழ்க்கையும்! ஆர்க்கும் நம்பிக்கை கொண்டு பாதையின் அறைகூ வல்தனை ஏற்றுச் செல்லுவேன்!

பீர்ச்சுமரச் சிற்றிலைமேல் துரங்கும்பனி போலே, மாசுகோசூழும் நாட்டுப்புறம் மங்கல்ஒளி மிளிரும். தோற்றும்பனித் திவலையிலே பொடியுருவாய்த் தோன்றும். தூய்மைமிகு உருசியமே தெள்ளுருவாய்க் காணும்............

8 H