பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாரி யின்கூர் விளிம்புகள் இருண்ட

கறைகள் தோய்ந்தவையே:

எட்டாக் காலமும் கடினப் பாதையும்

உறையாய் இட்டிருக்கும்.

காலப் போக்கில் கனிந்து சிறந்த

செம்மைக் கட்டாரி, சால மாந்தர் நன்றைத் தீதைச்

சாரத் துணைபுரியும். மேல வர்க்கும் எளியர்க் கும்.அது

மேலாய் உதவியது, கோல உயிரின் உயர்வை இழிவைக்

குறித்தது இதுவாகும்.

மானம் என்றால் ஒருமுகம் தானே,

என்றும் இரண்டாமோ.........? மானத் திற்கா ஊக்கத் துடனே

மலைக்கும் கட்டாரி. ஆன அலகுகள் அதனால் தானே

மழுங்க மறுத்திட்டுத் தான்ஒர் எஃகின் வாளாய் இணைந்து

விளிம்பு பெறும்ஒன்றே.

எஃகின் சினத்தில் கனன்ற தோற்றம்

வியந்தே ஆர்வமுடன், மிக்கென் எண்ணந் தன்னுள் ஆழ்ந்த

வேட்கை விளைந்ததுவே. உண்மையும் சொல்லும் ஒன்றாய் இணைந்தே

ஒளிர்கட் டாரியதன் நுண்கூர் இருமுனை போல்மின்னி ஒளிக்கும்

அலகாய் மாறுகவே.

92