பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பெதர் குஷங்காய் சுவெவியா,

உருசியக் கூட்டரசு (1907–1970)

சுவெவியாவிற்கு அழைப்பு

என்றும் மாறா இளமை கொண்டது

எங்கள் பழநாடே! இதனைப் போலக் கதையில் பாட்டில்

யாரும் படித்ததுண்டோ? இங்கே மாந்தர் இணைவிழை அரங்கின்

இருள்சேர் ஆடலிலும் எழும்பண் துய இன்னிசை ஆகி நெஞ்சம் சிலிர்த்திடுமே: இங்கே விளையாட்டு உவகை ஊற்றாய்

இன்னொளி பொங்கிடுமே; இங்கெம் உழைப்பால் மலையைக் கூட

இடம்பெயர்த் திடுவோமே.

நூறா யிரமாய் வளங்கொள் சொற்கள்

நுவலும் இனியமொழி:

நூறா யிரமாய்க் காதுக் கினிய நுகரும் பண்ணிசைகள்.

நூறா யிரமாம் பின்னல் வேலைகள்

நுட்பப் பாங்குடனே,

9.3