பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைய மகனை அழைத்துச் செல்கிறேன் பச்சை ஊதாம் பையில் பறக்கிறோம், பயணச் சீட்டிலை அறிக! நிலவின் வெள்ளித் தோட்டில்ஒர் பகுதியை உரித்தெ டுத்துக் கொண்டு திரும்புவோம். பலகணி வழியாய் வீட்டினுள் நுழைகிறோம். நேராய் மாயக் காரன்விளை யாட்டு விளையாடத் தொடங்குவோம். உறைபனிப் புயலை உரத்தழைத் திடுவோம். கற்களைப் பல்லியாய் மாற்றுவோம், மீண்டும் கற்களாய்ச் செய்வோம். அமைதியி னோடும் ஆர்ப்பொலி கூட்டிப் போலி இசைபதி தட்டுகள் செய்வோம். கட்டை விரல்அளவுக் கன்னி ஒருத்தி மேசைமேல் சுழன்று சுழன்றே ஆடுவாள். எதிர்பார்த்து நிற்கும் மகனிடம் சொல்கிறேன். “இங்கே இருப்பது கனவுலகின் திறவுகோல் எங்கும் பரவி எங்கும் ஊ டுருவும் நீல நிறத்து மாயக் கதிர்இதோ, வைரம் வேண்டிநீ விரும்பின் கதிரினைப் பாய்ச்சு 1 பிறகு காண்நீ ! பதக்க முகப்பிலே வைரம் பளிச்சிடும். சட்டைப் பையில் இடமுடி யாது ; பேரா சைக்கைப் பிடியில் கொள்ளாது. தேவதைக் கதையின் மாந்தரை அழைக்கலாம் ; ஆனால், அளவளா வுகையில் அதட்டலும், துடுக்கும் ஆகவே ஆகா: அதனை அவர்கள் தாங்கமாட் டார்கள். அவர்கள் அகல்வர்என் மாய அறையும் சிறிது சிறிதாய் மறைந்திடும். மாயக் கோல்கள், உடுக்கள், மாயக் காரியின் துடைப்பம் எல்லாம் ஒருபொடி இன்றி ஒடி மறையுமே.”

96