பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சாமுவெல் மர்ஷாக் உருசியக் கூட்டரசு

(1887–1964)

இறவாமை

நான்குமகிழ் ஆண்டுகளாய் இறவாமை துய்த்தேன், நான்விதியை நினைந்தழுது கண்ணிர்விட வில்லை; தோன்றவில்லை இறப்பென்முன் தப்பெண்ணம் இல்லை. சுடர்வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்வதற்கே அன்றோ?

இவ்வினிய உண்மையினைச் சிறார்களொடும் துய்ப்போம் வாழ்க்கைநிகழ் காலம்எனில் இன்னல்அச்சம் ஏது? ஒவ்வியஅவ் இறப்பொருநாள் உறுதிஎன் றாலும் உவந்து நுகர் வாழ்க்கையினைச் சாவஞ்சி நிற்கும்!

உருசியமொழிப் பாடம்

காலைக்கதிர் ஒளியில்ஒரு வகுப்பின்அறை மூழ்கும் கற்கும்.அறை விரிவேந்துடன் அமைதிக்கிட மாகும். மேலைத்திசை முன்னால் உள கருமைநிறப் பலகை பின்னால் உள எழுதும்மர மேசைகளில் எல்லாம்

I 26