பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

எட்வர்டஸ் மிஸெலையிட்டிஸ் லிதுவேனியா

(&, 1919)

மாந்தன்

கதிரோனாம் மண்டலத்தில் காலூன்றி உறுதியுடன் மிதந்தோடும் நிலக்கோளின் மீதில் நான் நிற்கின்றேன். நிலத்தையும் பரிதியையும் நேர்நின்று இணைத்தபடி நிலவும்இரு கோளத்தின் நடுவினிலே நான்உள்ளேன். மனத்தளங்கள், மூளையின் கருவூலம், மண்ணுலகின் இனத்தளப் புதைவளம்போல் எண்ணில் செழிப்பனவாம். அவற்றிருந்து நிலக்கரியை அகழ்ந்தெடுத்துக் கொள்வதுபோல், உவக்கும் கனிவளத்தை உருக்கிஎடுத்துக் கொள்வதுபோல், பெருங்கடலில் மாப்பெரிய நாவாயை விடுகின்றேன் : இரும்புத் தொடர்களால் நிலமெல்லாம் இணைக்கின்றேன்: விண்அளக்கும் பறவைபோல் விண்ணுர்தி ஆக்குகின்றேன் : விண்கணைகள் தம்மைப் படைக்கின்றேன்; மின்னலினால் உலகினைப்போல் முட்டை உருவமைந்த என்தலை நிலஆழத் திருந்தே நிறைந்துவெளிப் போந்ததுவே. எனினும்என் தலையின் எரிசுடர் கோளத்தின் இனிமை பொருந்திய இன்னொளிப் பாங்கன்றோ நிலத்திற்கும் கோள்களுக்கும் உயிர்ஊட்டிக் கொண்டுளது. நலந்திகழ எவ்விடத்தும் மாந்தஇனம் வாழ்கிறதே.

133