பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருசிய நாட்டின் ஒளிச்சுடர் ஒளிர்ந்தது. உருசியம் நோக்கி உலகெலாம் திரும்பின பிந்திக் கிடப்பதாய்ப் பேசினர்.அந் நாடுதான் உண்மை விடுதலை முதன்முதல் கண்டது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினேழாம் ஆண்டின் உச்சியிலே தான்என் உயர்விடம் காண்பேன். வரலாற் றில்முன் காணா வகையினில் அறிவும்.உள் ளுணர்வும் அளவிறந்து உயர்ந்தன. உருசிய நாடு கருவுற்றுப் பெற்ற கருத்து களாலே வரலாறு உருப்பெறு கின்றது உயர்வினை நோக்கியே.


சிரித்தாள் பெண்ணாள் சிந்தை கவர்ந்த சிரிப்பை முன்பின் கண்டறியேன். விரித்த கலைபோல் விம்மிப் புரண்டு நிழலும் ஒளியும் கூத்தாடும்.

காற்றோ அவளின் ஆடை விலக்கும் கையால் குறும்பைத் தடுத்திடுவாள். ஆற்றா மாந்தன் அல்லல் படவே ஆர்க்கும் சிரிப்பின் களிப்பீந்தாள்.

பேரின் பத்தின் தழலில் மூழ்கிச் சூழ்ந்த தனைத்தும் மாறிற்று. பேருல கெல்லாம் சுருங்கிக் குழம்பி இளமை புதுமை ஒளிபெறுமே.

ஒன்றும் இல்லை; ஆனால், அடடே ஒப்பில் லாஒர் மாயமடா! என்றெம் மொழியும் சொல்லும் உணர்த்தா ஏற்றம் பெண்ணின் சிரிப்பாகும்.

1 5 9