பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

ரசிய ஒவனேஸ்யான் அர்மீனியா

(19. 1919)

மதுவருந்தும் பாடல்

தங்கநிற நல்மதுவைக் கிண்ணம்நிறைத் திடுவேன் தக்கோர்கொடி முந்திரியைப் புகழ்தல்வியப் பலவே. கங்குல்ஒளி நண்பகலாய் ஆக்கிடும்நல் மதுவே...... கலந்துஅனைவர் தாமும்முன் காணியர்க்கே குடிப்போம்.

கீழ்நாட்டுக் கிண்ணமது மகிழ்ந்துறிஞ்சிச் சுவைப்பேன் கிளர்ச்சிதரு கருங்கிண்ணம் கிளர்ஒளியைத் தருமே. ஆழ்களிப்பின் காதல்இர வுக்கினிதுஇம் மதுவே, அவ்வினிய காதலர்க்கே அனைவருமே குடிப்போம்.

நிமிர்பரிதி நீள்சுடராய் பசும்பொன்ஒளி கூடும் நிறைமதுவை வழிந்திடவே நிரப்பிடுவீர் கிண்ணம், நிமிர்தலையைக் கிறக்குமணம் நிலவறைதான் மதுவை நீடுயர்க நண்பர்என வாழ்த்திநாமும் குடிப்போம்.

மூன்றான கிண்ணமது நிறைத்திடுவேன் முடிவாய் மூசைப்பொன் விண்ணின்வழி உதிர்பருவம் ஏற்கும், ஆன்றகொடி முந்திரிகொள் காலவிழா இன்பம் அமுதக்கொடி வளர்த்தவர்க்கே அனைவருமே குடிப்போம்.

15